வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: உள்ளாட்சி தேர்தல்

எடப்பாடி பழனிசாமி தொகுதியில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி!

எடப்பாடி பழனிசாமி தொகுதியில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
சேலம் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை 16 மையங்களில் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 10 தொகுதிகளை வென்றது. ஒரு தொகுதியில் மட்டுமே தி.மு.க. வெற்றி பெற்றது. இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் அதிகமான இடங்களை தி.மு.க. கைப்பற்றி வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி பகுதியில் எடப்பாடி நகராட்சி, அரசிராமணி, பூலாம்பட்டி பேரூராட்சிகள் உள்ளன. இதில் 15 வார்டுகள் கொண்ட அரசிராமணி பேரூராட்சியில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. எடப்பாடி நகராட்சி, பூலாம்பட்டி பேரூராட்சியிலும் அதிக இடங்களில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. சேலம் மாநகராட்சியை பொறுத்தவரையிலும் அதிக இடங்களில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. மாநகராட்சி பகுதியில் சேலம் தெற்கு தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வு...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டி!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டி!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க தனித்து போட்டி! அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜனதா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க இடப்பங்கீடு தொடர்பாக பா.ஜனதா தலைவர்கள் அ.தி.மு.க.வினருடன் பேச்சு நடத்தினார்கள். அப்போது 20 சதவீத இடங்கள் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் அ.தி.மு.க. தரப்பில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே வார்டுகள் ஒதுக்கீடு செய்ய முடியும் என்று கூறிவிட்டனர். இதனால் பா.ஜனதா அதிர்ச்சி அடைந்தது. நாகர்கோவில், கோவை மேயர் பதவிகளை ஒதுக்க வேண்டும். மேலும் வார்டுகளை பொறுத்தவரை தொகுதிக்கு ஒன்று வீதம் 21 வார்டுகள் தரவேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது. ஆனால் அ.தி.மு.க. தரப்பில் அதை ஏற்கவில்லை. இதனால் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் அ.தி.மு. க.வினர் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அதிரடியாக வெளியிட்டனர்...
உள்ளாட்சி தேர்தல்… பச்சைக்கொடி காட்டிய விஜய்!

உள்ளாட்சி தேர்தல்… பச்சைக்கொடி காட்டிய விஜய்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. குறுகிய கால இடைவெளியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாகி விட்டன. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தலில், விஜய் படம், விஜய் மக்கள் இயக்க கொடியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவுடன் முதன்முறையாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உ...
2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு! தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளில் 14,662 பதவிகளுக்கு கடந்த 6-ந்தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. அன்று 77.43 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. இந்த 9 மாவட்டங்களிலும் 2-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டு போட்டனர். விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 6,652 வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். கிராம பஞ்சாயத்து உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய 4 பதவிகளுக்கு தனித்தனியாக வாக்குகளை செலுத்தினர். 35 ஊராட்சி ஒன்றியங்களு...
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் ஊரக தொழில்துறை அமைச்சருமான தா.மோ. அன்பரசன் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி குழு, ஊராட்சி ஒன்றிய குழு, வார்டுகளில் வார்டு உறுப்பினர்கள் பொறுப்புக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம் வருமாறு: வார்டு எண். 3-ப.ராமமூர்த்தி, குன்னம் வார்டு எண்.4-எஸ்.பாலா (எ) பால்ராஜ், மொளச்சூர் வார்டு எண்.5-வி.அரி, நந்தம்பாக்கம் வார்டு எண்.6-படப்பை ஆ.மனோகரன் வார்டு எண்.7-கூட்டணி கட்சி ம.தி.மு.க.விற்கு ஒதுக்கீடு. செங்கல்பட்டு மாவட்டம் வார்டு எண்.1-ச.மனோகர், கவுல்பஜார் வார்டு எண்.4-கூட்டணி கட்சி காங்கிரசுக்கு ஒதுக்கீடு. வார்டு எண்.5-பூங்கோதை ராஜன், சிங்கப்பெருமாள் கோவில் வார்டு எண்.6-காயத்திரி அன...
உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடக்கூடாது- மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!

உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடக்கூடாது- மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடக்கூடாது- மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு! தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து கண்காணித்து  உரிய உத்தரவுகளை  பிறப்பித்து வருகிறது. அவ்வகையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ...
உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி.க. தயார்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி.க. தயார்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி.க. தயார்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி! தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள பிரசித்தி பெற்ற மகாலிங்க சுவாமி கோவிலில் நேற்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜைகளை செய்தார். தொடர்ந்து கோவிலில் உள்ள கோ சாலைக்கு சென்று பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கி வழிபட்டார். தொடர்ந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வெளியே அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்துவது என்பது ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதை காட்டுகிறது. தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க.வினருக்கு சொந்தமான இடங்களிலும்,  அ.தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் தி.மு.க.வினருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்துவது என்பது பல ஆண்டுகளாக நடக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.த...
உள்ளாட்சி தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!

உள்ளாட்சி தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
உள்ளாட்சி தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை! தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்  நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். செப்டம்பர் 15ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல்  நடத்தப்படாத 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஆலோசனை நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது....
இன்று மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தயாராகிறது!

இன்று மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தயாராகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இன்று மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக தயாராகிறது! தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க முடியாமல் போனது. என்றாலும் 66 இடங்களை கைப்பற்றி அ.தி.மு.க. தனது வலிமையை நிரூபித்தது. ஜெயலலிதா இல்லாத நிலையில் எடப்பாடி பழனிசாமி,   ஓ.பன்னீர்செல்வம்  தலைமையில் அ.தி.மு.க. பெற்ற இந்த வெற்றியை முக்கியத்துவமாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தேர்தலில் 3 சதவீத வாக்குகளே வித்தியாசம் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே  அ.தி.மு.க. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயல்படும் என்று  தொண்டர்கள் கருதுகிறார்கள். ஆனால் அரசியலை விட்டு ஒதுங்குவதாக கூறியிருந்த சசிகலா மூலம் மீண்டும் அ.தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அ....