வியாழக்கிழமை, மே 16
Shadow

Tag: கொரோனா ஊரடங்கு

தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் இரவுநேர ஊரடங்கு – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் இரவுநேர ஊரடங்கு – அரசு அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் இரவுநேர ஊரடங்கு - அரசு அறிவிப்பு! தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார். கொரோனா தடுப்பு பணி தொடர்பாக கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்  சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கினர். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், க...
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் நீட்டிப்பு -முதலமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் நீட்டிப்பு -முதலமைச்சர் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் நீட்டிப்பு -முதலமைச்சர் அறிவிப்பு! தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தீபாவளி பண்டிகையையொட்டி பொது இடங்களில் கூட்டத்தை தவிர்ப்பது குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 31.10.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. பண்டிகைக் காலங்களில், கொரோனா நோய்த் தொற்று பரவலைத் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ...
கோவையில் இன்று முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு – பஸ்கள் வழக்கம்போல் இயங்கின!

கோவையில் இன்று முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு – பஸ்கள் வழக்கம்போல் இயங்கின!

helth tips, NEWS, செய்திகள்
கோவையில் இன்று முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு - பஸ்கள் வழக்கம்போல் இயங்கின! கோவை மாவட்டத்தில் மெல்ல, மெல்ல குறைந்து வந்த கொரோனா தொற்று, தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அதிகம் கூடக்கூடிய வீதிகள் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று கோவை கிராஸ்கட் ரோடு, ஒப்பணக்கார வீதி, 100 அடி ரோடு, காந்திபுரம் 5,6,7-வது வீதிகள், ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை(ராயல்நகர் சந்திப்பு), ரைஸ்மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலூர் சந்திப்பு பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் அந்த பகுதி முழுவதும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி...
மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசாங்கத்தை நிர்பந்தித்து விடாதீர்கள் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசாங்கத்தை நிர்பந்தித்து விடாதீர்கள் – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசாங்கத்தை நிர்பந்தித்து விடாதீர்கள் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:- கொரோனா என்ற பெருந்தொற்று கடந்த 18 மாதங்களாக நாட்டையும், நாட்டு மக்களையும் வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது. கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்தி இருக்கிறோம். கேரளா, கர்நாடகா போன்ற நமது அண்டை மாநிலங்களில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மராட்டியத்தில் கூடுதலாகி வருகிறது. மக்கள்தொகை நெரிசலாகவும், அதிகமாகவும் உள்ள நாட்டில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருந்தாலும், மக்களை காக்கிற பெரும் பொறுப்பு அரசின் கையில் இருக்கிறது என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். அதற்கேற்ப பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டும் வருகிறோம். முழு ஊரடங்கு பிறப்...
உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு தினந்தோறும் உணவு வழங்கும் யோகிபாபு பட தயாரிப்பாளர்!

உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு தினந்தோறும் உணவு வழங்கும் யோகிபாபு பட தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு தினந்தோறும் உணவு வழங்கும் யோகிபாபு பட தயாரிப்பாளர்! கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு டிஸ்கவர் ஸ்டூடியோ பிலிம் கம்பெனி எனும் தயாரிப்பு நிறுவனம் உதவி வருகிறது. இந்நிறுவனம், தற்போது தினேஷ் மாஸ்டர் மற்றும் யோகிபாபு நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறது. எஸ்.பி.ராஜ்குமார் இப்படத்தை இயக்குகிறார். சென்னையில் ரோட்டோரம் உணவின்றி தவிக்கும் 100 ஏழைகளுக்கு பார்சலில் உணவு மற்றும் ஜூஸ் வழங்கி வருகின்றனர். டிஸ்கவர் ஸ்டூடியோ பிலிம் கம்பெனி எனும் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் இசையமைப்பாளர் வி.ஆர்.ராஜேஷின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன...