வியாழக்கிழமை, மார்ச் 28
Shadow

Tag: சந்தானம்

வடக்குப்பட்டி ராமசாமியில் இணைந்த மேகா ஆகாஷ்!

வடக்குப்பட்டி ராமசாமியில் இணைந்த மேகா ஆகாஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் சந்தானம் தற்போது 'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கும் 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தில் நடிக்கவுள்ளார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் பேட்ட, பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை உள்ளிட்ட பல படங்களில் நடித்த மேகா ஆகாஷ் இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது....
வைரலாகும் சந்தானம் படத்தின் இரண்டாவது பாடல்!

வைரலாகும் சந்தானம் படத்தின் இரண்டாவது பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கிக்'. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கிக்' படத்தின் இரண்டாவது பாடலான 'கண்ணம்மா' பாடல் இன்று மாலை 6.03 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.   https://twitter.com/Fortune_films/status/1601481382098010113?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E...
குலு குலு  படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

குலு குலு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  'மேயாதமான்', 'ஆடை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கியிருக்கும் படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்திற்கு 'குலு குலு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.   இவர்களுடன் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, 'லொள்ளு சபா' மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இதனை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ராஜ் நாராயணன் தயாரித்திருக்கிறார்....
சந்தானத்தின் ” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சந்தானத்தின் ” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் சந்தானம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குலு குலு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த படம் ஜுன் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'மேயாதமான்', 'ஆடை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'குலு குலு'. இந்தப் படத்தில் சந்தானம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகைகள் அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ' லொள்ளு சபா' மாறன், 'லொள்ளு சபா' சேசு, டி எஸ் ஆர், பிபின், கவி, ஹரிஷ், யுவராஜ், மாரிதாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் கவனித்திருக்கி...
சந்தானத்துடன் இணைந்த மாஸ்டர் பிரபலம்!

சந்தானத்துடன் இணைந்த மாஸ்டர் பிரபலம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சந்தானம். இவர் நடிப்பில் டிக்கிலோனா மற்றும் சபாபதி ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை மனோஜ் பீதா இயக்கி வருகிறார். இந்நிலையில் சந்தானம் அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய எம்.ரத்னகுமார் இயக்கும் புதிய படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு 'குலுகுலு'  என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ராஜ் நாராயணன் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். குலுகுலு...
ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் டீசர்!

ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் டீசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் டீசர்! காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சந்தானம். இவர் நடிப்பில் டிக்கிலோனா என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது இவர் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை மனோஜ் பீதா இயக்கி வருகிறார். ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் டீசரை நடிகர் ஜீவா மற்றும் நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளனர். நடிகர் சந்தானத்தின் பிறந்தநாளான இன்று அப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதன் டிசர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது....
சர்வர் சுந்தரம் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சந்தானம்!

சர்வர் சுந்தரம் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சந்தானம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சர்வர் சுந்தரம் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சந்தானம்! ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் சர்வர் சுந்தரம். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்திருக்கிறார். பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, சண்முகராஜன், சுவாமிநாதன், ராதா ரவி, செஃப் தாமோதரன், வெங்கடேஷ் பட், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 2017-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் சில பிரச்சனைகள் காரணமாக ரிலீசாகாமல் முடங்கி உள்ளது. இந்நிலையில், நடிகர் சந்தானம், சமீபத்தில் சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் சர்வர் சுந்தரம் படத்தின் ரிலீஸ் குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சந்தானம், இப்படம் விரைவில் ஓடிடி-யில் வெளியாகும் ...
சர்ச்சையை தேடும்விதமாக ஆடை இல்லாமல் ஆபாச போஸ்டர் வெளியிட்ட சந்தானம்!

சர்ச்சையை தேடும்விதமாக ஆடை இல்லாமல் ஆபாச போஸ்டர் வெளியிட்ட சந்தானம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சந்தானத்தின் டிக்கிலோனா பட ஆபாச போஸ்டர்..! சின்னத்திரையில் அடுத்தவர்களை நக்கல் நையாண்டி செய்து பெரிய திரையில் காமெடியனாக கால் பதித்து பின்னர் காமெடி ஹீரோவாக மாறியவர் சந்தானம். இவர் நடித்து வரும் படம் டிக்கிலோனா. படத்தின் பெயரே ஒரு மார்க்கமாக இருப்பது போல அந்த படத்தின் விளம்பர போஸ்டரிலும் ஆடை இல்லாமல் சந்தானம் நிற்கிறதை சக நடிகர்கள் பின்னால் இருந்து அதிர்ச்சியாக பார்ப்பது போல அந்த டிசைன் அமைந்துள்ளது. கண்டிப்பாக சர்ச்சையை ஏற்படுத்தும் என தெரிந்தே சந்தானம் இப்படி டிசைன் வெளியிட்டு இருக்கிறார் போல. உலகமே கொரானா ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் போது அனைவர் கவனத்தையும் ஈர்க்க ஆடைகளை துறந்திருக்கிறாரோ சந்தானம். போஸ்டரே இப்படி என்றால் டிக்கிலோனா படம் எப்படி இருக்குமோ... ...
கண்ணன் இயக்கத்தில் சந்தானத்தின் “பிஸ்கோத்”

கண்ணன் இயக்கத்தில் சந்தானத்தின் “பிஸ்கோத்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    இயக்குநர் ஆர்.கண்ணன், தானே எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் 'பிஸ்கோத்'. இயக்குநர் ஆர்.கண்ணன், தானே எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் 'பிஸ்கோத்'. இதில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். கண்ணன் இயக்கத்தில் 'ஜெயம் கொண்டான்' மற்றும் 'கண்டேன் காதலை' படங்களில் சந்தானம் நடித்திருந்தார். ஆனால், அவரை கதாநாயகனாக வைத்து இயக்குவது இதுதான் முதல் படம். பிஸ்கட் கம்பெனியில் சாதாரணமாக பணியாற்றுபவன் எப்படி உயர் பதவிக்கு செல்கிறான் என்பதே இப்படத்தின் கதை. இப்படத்தில் 'சௌகார்' ஜானகி சந்தானத்தின் பாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவருக்கு 400-வது படம். இப்படத்தில் சந்தானத்திற்கு மூன்று வேடங்கள் இருக்கிறது. அதில் ஒன்று 'சகலகலா வல்லவன்' படத்தில் கமல் போல வேடம் அணிந்து இருப்பார். அந்த வேடத்தில் அந்த கால பாணியில் ஒரு சண்டைக் காட்சியும் இருக்கிறது. அதேபோல், ஐதராபாத...
சந்தானத்தின் டிக்கிலோனா ஷூட்டிங் ஓவர்!

சந்தானத்தின் டிக்கிலோனா ஷூட்டிங் ஓவர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிற டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.  இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலே அசரடிக்கும் அளவில் இருக்கிறது. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை படம் மூலம் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திழுத்த அனகா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக இளைஞர்கள் நெஞ்சில் தஞ்சம் அடைந்த  ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இன்றைய தமிழ்சினிமாவின் எனர்ஜிடிக் காமெடியன் யோகிபாபு, வில்லத்தனம் கலந்த காமெடியால் ஆடியன்ஸை சுவாரசியப்படுத்தும் ஆனந்த்ராஜ், குணச்சித்திரம் காமெடி என அந்தக் கேரக்டருக்கான முக்கியத்துவத்தை நடிப்பில் கொண்டு வரும் முனிஷ்காந்த், அனுபவம் வாய்ந்த நடிகர்களான நிழல்க...