திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: டோக்கியோ ஒலிம்பிக்

கொரானாவால் தடைபட்ட ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஜூலை 23ல் தொடங்கும்!

கொரானாவால் தடைபட்ட ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஜூலை 23ல் தொடங்கும்!

HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
    கொரானா வைரஸ் பீதியால் தள்ளிப்போன ஒலிம்பிக் போட்டிகள் வரும் 2021 ஜூலை 23ம் தேதி தொடங்கும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை பலிவாங்கி வரும் கொரானா வைரஸ் பரவலால் உலகின் பல நாடுகளில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் சீர்குலைந்து உள்ளது. 2020ல் டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரானா தொற்று பீதி காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த சூழலில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அவசர கூட்டத்தில் 2020 ஒலிம்பிக் போட்டிகளை டோக்கியோவில் வரும் ஆண்டு ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. உலகை அச்சத்தில் ஆழ்த்தி உள்ள கொரானா பீதி அதற்குள் கட்டுக்குள் வந்துவிடும் என ஒலிம்பிக் கமிட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளது....
கொரானா பீதியிலும் கிரீஸ் நாட்டில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது!

கொரானா பீதியிலும் கிரீஸ் நாட்டில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    கொரானா பீதியிலும் கிரீஸ் நாட்டில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது! உலகம் முழுதும் கொரானா பீதியால் மக்களின் இயல்பான நடவடிக்கைகள் முடங்கிப் போய் உள்ளது. ஏற்கனவே திட்டமிட்ட எல்லா நிகழ்வுகளும் மாற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில் 2020 ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடைபெறவுள்ளது இந் நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்த போட்டி நடக்குமா அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் நேற்று பாரம்பரிய முறைப்படி கிரீஸ் நடிகை ஸாந்தி ஜியார்ஜிவ் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். கொரோனா பீதி காரணமாக இந்த நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஒலிம்பிக் ஜோதி அடுத்த 7 நாட்கள் கிரீஸ் நாட்டில் தொட...
கொரானா வைரஸ் பீதி டோக்கியோ ஒலிம்பிக் ரத்தாகுமா?

கொரானா வைரஸ் பீதி டோக்கியோ ஒலிம்பிக் ரத்தாகுமா?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா வைரஸ் பீதி டோக்கியோ ஒலிம்பிக் ரத்தாகுமா? டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை 24  ஆம் தேதி முதல்  மற்றும் ஆகஸ்டு 9 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளையில், சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஜப்பானையும் கொரோனா வைரஸ் தாக்கம் விட்டு வைக்கவில்லை. இதனால், வரும் ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானில் திட்டமிட்டபடி நடத்தப்படுமா? என்று கேள்விகள் எழுந்தன மே மாதத்திற்குள் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் கூறியதாக செய்தி நிறுவனம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கை வேறு இட...