திங்கட்கிழமை, மே 13
Shadow

Tag: தங்க தமிழ்செல்வன்

தினகரனின் அமமுகவில் இருந்து விலகி ஸ்டாலினுக்கு மஞ்சள் சால்வை அணிவித்து திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்..!

தினகரனின் அமமுகவில் இருந்து விலகி ஸ்டாலினுக்கு மஞ்சள் சால்வை அணிவித்து திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தினகரனுடன் மோதல் ஏற்பட்டதால் அமமுகவில் இருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தார். தினகரனின் வலது கரமாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் திடீரென தினகரனை விமர்சிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் இந்த முட்டல் மோதல் உச்சகட்டத்தை அடைந்ததால் தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவில் இருந்து நீக்கப்படுவார் என தினகரன் அறிவித்தார். இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைய திட்டமிட்டுள்ளார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அதற்கு பச்சைக்கொடி காட்டி விட்டதாகவும், ஓ.பி.எஸ் தரப்பில் எதிர்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் திடீரென திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இதற்கு முன்பே தங்க தமிழ்செல்வனை அமமுகவில் இருந்து நீக்கிவிட்டதாக தினகரன் அறிவித்திருந்தார். இதற்கிடையில் அமமுகவில் இருந்து வெளியேறிய...
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் முகாம்!

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குற்றாலத்தில் முகாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஜெயலலிதா மறைவுக்கு பின்னால் கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு சிக்கல்களை அ.தி.மு.க. சந்தித்து வருகிறது. முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற நிலையில், அ.தி.மு.க.வை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு (2017) ஆகஸ்டு மாதம் 22-ம் தேதி அப்போது கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். அன்றைய தினமே சபாநாயகர் ப.தனபாலை சந்தித்த அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன், “அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவுக்கு எதிராக 19 பேரின் செயல்பாடு உள்ளது” என்று புகார் அளித்தார். அதன் அடிப்படையில், 19 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் ப.தனபால் நோட்டீஸ் அனுப்பினார். 19 பேரில் ஜக்கையன் (கம்பம் தொகுதி) மட்டும்...