வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: தென்மேற்கு பருவமழை

10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தென்மேற்கு பருவமழை கேரளாவில் வலுவடைந்து இருக்கிறது. இதன் காரணமாகவும், தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. அந்த வகையில் நாளையும் (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாளும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை...
தென்மேற்கு பருவமழை- தென் தமிழகத்தில் கூடுதல் மழை பொழிவுக்கு வாய்ப்பு!

தென்மேற்கு பருவமழை- தென் தமிழகத்தில் கூடுதல் மழை பொழிவுக்கு வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை பொழிவு கிடைக்கும். தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரம் கேரளாவில் தொடங்கும். அதன்பின்பு படிப்படியாக கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு பரவி மழை பொழிவை அளிக்கும். இதனால் இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்குகிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வரும். அதன்படி அந்தமான் தீவுகளில் தான் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படும். கடந்த சில நாட்களாக இதற்கான அறிகுறிகள் அந்தமான் கடல் பகுதியில் தென்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தினர் கூறி இருந்தனர். தற்போது அந்தமான் தீவுகளில் பருவ மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதையடுத்து வருகிற 27ந் தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இ...
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி 21-ந் தேதி உருவாகிறது!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி 21-ந் தேதி உருவாகிறது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி 21-ந் தேதி உருவாகிறது! தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் பெய்கிறது. சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்கிறது. இதனால் மண்ணில் ஈரப்பதம் ஏற்பட்டு குளிர்ந்த காற்று வீசுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஏரி, குளங்களிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் 2 நாட்களுக்கு சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகிற 21-ந் தேதி உருவாகிறது. இதனால் கேரளா, கர்நாடகா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில...
கடந்த ஆண்டைவிட முன்கூட்டியே பருவமழை தொடங்கும்!

கடந்த ஆண்டைவிட முன்கூட்டியே பருவமழை தொடங்கும்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கடந்த ஆண்டைவிட முன்கூட்டியே பருவமழை தொடங்கும்! தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கும். கடந்த ஆண்டு தாமதமாக ஜூன் 7-ந் தேதி பருவ மழை தொடங்கியது. எனவே இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை எப்போது தொடங்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:- தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு ஜூன் மாதம் 4-ந் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது. பசிபிக் பெருங்கடல்-இந்திய பெருங்கடல் பகுதிகளில் வீசும் காற்றின் போக்கு பருவ மழை தொடங்குவதற்கான சூழலை ஏற்படுத்தி உள்ளது. இதை வைத்து பார்க்கும் போது ஜூன் முதல் வாரம் பருவ மழை தொடங்கிவிடும். அநேகமாக ஜூன் 4-ந் தேதி பருவ மழை தொடங்க வாய்ப்பு உள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவ மழை காலங்களில் கேரளாவில் அதிக மழை கிடைக்கும். தமிழகத்தில் அதில் பாதி அளவு தான் மழை கிடைக்கும். ஆனாலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிய...
ஜூன் 6ம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்குமாம்..!

ஜூன் 6ம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்குமாம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி, கேரளாவில் மே மாதம் இறுதி வரை தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இந்நிலையில் லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியது. இதன் மூலம் இன்னும் 4 நாட்களில் பருவ மழை தொடங்குமாம். இவர்களின் தகவல் படி வருகிற 6-ந்தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் பருவமழை தொடங்கிய சில தினங்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பொழியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவ மழை குறித்த காலத்தில் தொடங்குவதும் இல்லை. மழையும் குறைவான அளவில் தான் பெய்கிறது. இந்த ஆண்டாவது மழை சரியான நேரத்தில் தொடங்கி தண்ணீர் பஞ்சத்தை போக்குமா என்பதே தமிழ்நாட்டின் இப்...
தென்மேற்கு பருவமழை வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் கேரளாவில் பெய்யத் தொடங்கும்

தென்மேற்கு பருவமழை வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் கேரளாவில் பெய்யத் தொடங்கும்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தென்மேற்கு பருவமழை வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் கேரளாவில் பெய்யத் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த முறை 5 நாட்கள் தாமதமாக தொடங்குகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், 2019-ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை புள்ளியியல் ஆய்வின்படி கேரளாவில் சற்று தாமதமாகத் தொடங்க வாய்ப்புள்ளது. வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி தொடங்குவதற்கு பதிலாக ஜூன் 6-ஆம் தேதி தொடங்கும் எனவும், அந்தமான் நிகோபர் கடல் பகுதியில் வரும் 18-ஆம் தேதி அல்லது 19-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....