தென்மேற்கு பருவமழை வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் கேரளாவில் பெய்யத் தொடங்கும்

25 Views

தென்மேற்கு பருவமழை வரும் ஜூன் 6ஆம் தேதி முதல் கேரளாவில் பெய்யத் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த முறை 5 நாட்கள் தாமதமாக தொடங்குகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், 2019-ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை புள்ளியியல் ஆய்வின்படி கேரளாவில் சற்று தாமதமாகத் தொடங்க வாய்ப்புள்ளது.

வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி தொடங்குவதற்கு பதிலாக ஜூன் 6-ஆம் தேதி தொடங்கும் எனவும், அந்தமான் நிகோபர் கடல் பகுதியில் வரும் 18-ஆம் தேதி அல்லது 19-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *