வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

வரலட்சுமியை கழற்றி விட்டவர் விஷால் – சாட்டை விளாசிய நடிகர்

 

கொச்சின் ஷாதி அட் சென்னை 03 என படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது.

ஹீரோவாக நடித்துள்ள ஆர்.கே.சுரேஷ் இந்த படம் தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த விழாவில் ஆர்.கே. சுரேஷ் பேசியது:

ஆர்.கே.சுரேஷிடம், நடிகர் சங்கம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்ட போது, “நாசர் தலைமையில் தேர்தலில் நிற்கும் அனைவருக்கும் ஆதரவாக செயல்படுவேன்.

ஆனால், விஷால் நின்றால் அவருக்கு எதிராக செயல்படுவேன்.

அதேபோல், விஷாலை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுபவர்களு உறுதுணையாக இருப்பேன்.

எனக்கும் விஷாலுக்கும் இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. அவர் என் ‘பில்லா பாண்டி’ படத்தை பார்க்காமல் விமசித்ததை கூட நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

நடிகர்கள் சங்கத்தில் நாடக கலைஞர்களை ஒருங்கிணைத்ததில் ஜே.கே.ரித்தீஷின் மிகப்பெரிய பணி இருக்கிறது. ஆனால், அவரையே விஷால் தூக்கி எறிந்துவிட்டார்.

இது விஷாலுக்கு புதிதல்ல, நடிகர் உதயா எல்லா வகையிலும் கூடவே இருந்த அவரது மேலாளர் முருகராஜ் என்று அனைவரையும் அவர் தூக்கி எறிந்தவர் தானே, ஏன் நடிகை வரலட்சுமியை கூட பயன்படுத்திவிட்டு கழற்றி விட்டவர்.

இதை நான் ஒரு நண்பர் என்ற முறையில் தான் சொல்கிறேன், நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம்.

நாடக நடிகர்களை பூச்சி முருகன் அவர்களும் ஒருங்கிணைத்தார்.
கண்டிப்பாக விஷால் தனிமை படுத்தப்படுவார்.

இந்த தேர்தலில் நாங்கள் அமைக்கும் அணிதான் வெற்றி பெரும்.

401 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன