செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

ஜூன் 6ம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்குமாம்..!

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அதன்படி, கேரளாவில் மே மாதம் இறுதி வரை தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

இந்நிலையில் லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியது.

இதன் மூலம் இன்னும் 4 நாட்களில் பருவ மழை தொடங்குமாம்.
இவர்களின் தகவல் படி வருகிற 6-ந்தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் பருவமழை தொடங்கிய சில தினங்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பொழியும்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவ மழை குறித்த காலத்தில் தொடங்குவதும் இல்லை. மழையும் குறைவான அளவில் தான் பெய்கிறது.


இந்த ஆண்டாவது மழை சரியான நேரத்தில் தொடங்கி தண்ணீர் பஞ்சத்தை போக்குமா என்பதே தமிழ்நாட்டின் இப்போதைய எதிர்பார்ப்பு.
கோடை மழையும் பொய்த்துப் போனதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் குறிப்பாக தலை நகரமான சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.

581 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன