வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

தேவி 2வில் இரண்டு ஆவி… லாபமா காமி – கோடங்கி விமர்சனம்

 

ஹீரோயினுக்கு அழகான பேய் புடிச்சா அது தேவி … அதேநேரம் கதாநாயகனுக்கு பேய் புடிச்சா அதுவும் ஒண்ணு இல்ல இரண்டு பேய் புடிச்சா… அட அதாங்க தேவி 2

தேவில மும்பைக்கு வேலைக்கு போற பிரபுதேவா மனைவி தமன்னா மீது அகால மரணமடைந்த நடிகையின் ஆவி புகுந்து அதன் பிறகு நடக்கும் களேபரங்கதான் காட்டப்பட்டது.

தேவி 2 அதேட தொடர்ச்சியா இருந்தாலும் வித்தியாசம் காட்டனுமில்ல…

அதனால ஜோசியத்த நம்பி மொரிஷியஸ் நாட்டில் வேலைக்கு போகிறார் பிரபுதேவா. கூடவே மனைவி தமன்னாவும்…

 

அங்கே போனதும் இனி மனைவி தமன்னாவை எந்த ஆவியும் பிடிக்காதுன்னு சந்தோஷமாகிறார்.

ஆனா தமன்னாவுக்கு பிரபுதேவா மேல சந்தேகம்… ஒரு கட்டத்தில் பிரபுதேவா மேல இரண்டு ஆவிகள் இருப்பதை கண்டு பிடிக்கிறார்.

அதை வெளியேற்ற வக்கீல் கோவை சரளாவுடன் சேர்ந்து தமன்னா செய்கிற சேட்டையில் ஆவிகள் ஓடியதா… இல்லியா எனபதுதான் தேவி 2 கதை.

ஒரே மாதிரியான காட்சிகள்… ஒரே வித்தியாசம் முத மும்பையில… இரண்டாவது மொரீஷியஸ்ல…

தம்ன்னா கவர்ச்சி காட்டி புருசனை மயக்குறேன்னு அரைகுறை டிரஸ்ல லெக் பீஸ் பளீர்னு தெரிய ஆட்டம் போடுறார்.

 

காமெடி பன்றேன்னு கோவை சரளா பன்ற அட்ராசிட்டி இருக்கே… ஸ்…. அப்பாடா முடியல சாமி… நிஜமாவே ஆவி இருந்தா முத காமெடின்னு சொல்லி கொல்ற எல்லாத்தையும் தலைகீழா தொங்கவுட்ரும்… அவ்ளோ மொக்கை…

அழகா பாவாடை தாவணி, சுடிதார்ல நடிச்ச நந்திதாவை கிளாமர் காட்டுன்னு மொரீஷியஸ் கூட்டிகிட்டு போய்… கவர்ச்சி பேய் மாதிரி காட்டியிருக்காங்க…

வழகம் போல மொத பாகத்துல இருந்த ரேடியோ ஜாக்கி பாலாஜி ஒடஞ்சி ஒழுகும் ஓட்டை குழாய் மாதிரி பிரேமுக்குள்ள வரும்போதெல்லாம் லொட லொடன்னு பேசிகிட்டே ஓட்டம் எடுக்குறார்.

சாம் சி.எஸ் இசை… நச்சுன்னு சொல்ற மாதிரி பாட்டோ பின்னணியோ நினைவுக்கு வந்திருந்தா குறிப்பிட்டிருக்கலாம்…

மொத்தத்துல தேவி 2 முத பத்தியில சொன்ன மாதிரி தான்…

கணேஷ், ரவீந்திரன் இரண்டுபேரும் சேர்ந்து தயாரிச்சி ஸ்கிரீன் சீன்ஸ்னு ஒரு கம்பெனி ரிலீஸ் பன்ன ஆவி படம்…

ஆவி கண்ணுக்கு தெரியுமா… தெரியாது… அதே மாதிரி தேவி 2 லாபம்…

அதுவும் கண்ணுக்கு தெரியாது…!

– கோடங்கி

1,186 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன