புதன்கிழமை, மே 15
Shadow

Tag: பூஜா ஹெக்டே

பீஸ்ட் படத்திற்கு வந்த புதிய சிக்கல்!

பீஸ்ட் படத்திற்கு வந்த புதிய சிக்கல்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் - பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்து வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. ஏப்ரல் 13ம் தேதி அன்று திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், பீஸ்ட் திரைப்படத்தை புதுச்சேரியில் தடை விதிக்க வேண்டும் என்று புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அவர்களுக்கு தமுமுக மாநில செயலாளர் அப்துல் ரஹீம் கடிதம் எழுதியுள்ளார்....
பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி – வைரலாகும் புகைப்படம்!

பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி – வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். பூஜா ஹெக்டே தமிழில் 2012-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான 'முகமூடி' படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபலமானார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் 'பீஸ்ட்' படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பூஜா ஹெக்டே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பச்சை நிற கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. https://twitter.com/hegdepooja/status/1500684502720389125?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed...
தெறிக்க விடும் பீஸ்ட் பர்ஸ்ட் சிங்கிள்!

தெறிக்க விடும் பீஸ்ட் பர்ஸ்ட் சிங்கிள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் புரமோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முழு பாடல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. https://youtu.be/-aVdxDDrcTc...
மதுபான விளம்பரத்தில் நடிகைகள்… வலுக்கும் எதிர்ப்பு!

மதுபான விளம்பரத்தில் நடிகைகள்… வலுக்கும் எதிர்ப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
மதுபான விளம்பரத்தில் நடிகைகள்... வலுக்கும் எதிர்ப்பு! நடிகர், நடிகைகள் சினிமாவை தவிர்த்து சொந்த தொழில்கள் மூலமும் விளம்பர படங்களில் நடித்தும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். தரமற்ற பொருட்களை அவர்கள் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. ஏற்கனவே ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளம்பரப்படுத்திய தமன்னா கோர்ட்டு வழக்கு சர்ச்சையில் சிக்கினார். தற்போது முன்னணி நடிகைகள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அழகு சாதன பொருட்களை போட்டி போட்டு விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்க தொடங்கி உள்ளனர். இதனை மிஞ்சும் வகையில் ஹன்சிகா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட சில நடிகைகள் வெளிநாட்டு மதுபானங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திரைப்படங்களில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது தீங்கானது என்று விளம்பரம் செய்யும் நிலையில் இவர்கள் உணவுடன் மதுபாட்டிலை வைத்தும், கிள...
ஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி!

ஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி! நடிகை பூஜா ஹெக்டே, கடந்த 2012-ம் ஆண்டு, மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதையடுத்து தெலுங்கு மற்றும் இந்தியில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமான அவர், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் 9 ஆண்டுகள் கழித்து தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் பூஜா ஹெக்டே. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே, அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், விஜய் குறித்து ஒரு வார்த்தையில் கூறுமாறு கேட்டார். இதற்கு பதிலளித்த பூஜா ஹெக்டே, “அவரைப் பற்றி கூற ஒரு வார்த்தை போதாது. இருந்தாலும் முயற்சி செய்கிறே...
இதுவரை எந்த ஹீரோயினும் நடித்திராத வேடத்தில் நடித்துள்ளேன் – பூஜா ஹெக்டே!

இதுவரை எந்த ஹீரோயினும் நடித்திராத வேடத்தில் நடித்துள்ளேன் – பூஜா ஹெக்டே!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
இதுவரை எந்த ஹீரோயினும் நடித்திராத வேடத்தில் நடித்துள்ளேன் - பூஜா ஹெக்டே! தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தெலுங்கில் பிரபாசுக்கு ஜோடியாக ராதே ஷ்யாம், அகில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் படத்தில் இதுவரை எந்த கதாநாயகிகளும் நடித்திராத, ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறாராம் பூஜா ஹெக்டே. ஸ்டாண்ட் அப் காமெடி செய்பவராக இந்தப்படத்தில் நடித்து உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்....
குவியும் பட வாய்ப்பு…. கால்ஷீட் கொடுக்க மறுக்கும் பூஜா ஹெக்டே !

குவியும் பட வாய்ப்பு…. கால்ஷீட் கொடுக்க மறுக்கும் பூஜா ஹெக்டே !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
குவியும் பட வாய்ப்பு.... கால்ஷீட் கொடுக்க மறுக்கும் பூஜா ஹெக்டே ! தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். தற்போது தமிழ், தெலுங்கும், இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் ஆச்சார்யா, ராதே ஷியாம், மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர், சர்க்கஸ், தளபதி 65 போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் உள்ளன. இந்நிலையில் மகேஷ்பாபு, திரிவிக்ரம் இணையும் படத்தில் பூஜா ஹெக்டே நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள பூஜா ஹெக்டே, இப்போதைக்கு தனது முழுக் கவனமும் கைவசமுள்ள படங்களில் தான் உள்ளதாக தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் குறைந்த பிறகு கைவசம் உள்ள படங்களில் நடித்து முடித்த பிறகுதான் மற்ற நடிகர்களின் படங்களில் நடிப்...
பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா!

பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
‘தளபதி 65’ பட நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா! மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்தது. படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விஜய் தேர்தல் முடிந்ததும் ஜார்ஜியா புறப்பட்டு சென்றார். பூஜா ஹெக்டேவும் ஜார்ஜியா சென்று இருந்தார். விஜய், பூஜா ஹெக்டேவின் காதல் மற்றும் டூயட் பாடல் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது ஜார்ஜியாவில் படப்பிடிப்பை முடித்து விட்டு படக்குழுவினர் சென்னை திரும்பி உள்ளனர். இந்தநிலையில் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதுகுறித்து பூஜா ஹெக்டே டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘எனக்கு கொரோனா தொற்று ...
படப்பிடிப்பு தளத்தில் சுதந்திரமாக இருக்க முடியவில்லை- பூஜா ஹெக்டே!

படப்பிடிப்பு தளத்தில் சுதந்திரமாக இருக்க முடியவில்லை- பூஜா ஹெக்டே!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
படப்பிடிப்பு தளத்தில் சுதந்திரமாக இருக்க முடியவில்லை- பூஜா ஹெக்டே! ஜீவா ஜோடியாக முகமூடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தற்போது நெல்சன் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டி வருமாறு:- “கொரோனாவுக்கு முந்தைய வாழ்க்கை, கொரோனாவுக்கு பிந்தைய வாழ்க்கை என்று கொரோனா எல்லோரது வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனாவுக்கு முன்பு ஜாலியாக சுற்றிய மாதிரி இப்போது சுற்ற முடியாத நிலைமை உள்ளது. கொரோனா முன்னால் எல்லோரும் சமம். அதற்கு பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் கிடையாது. எல்லோரையும் தாக்குகிறது. விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டி உள்ளது. பாதுகாப்புக்கு எல்லா முன் எச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்க வேண்டி உள்ளது. குடும்பத்தில் உள்ளவர்கள் வீட்டோடு இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ...
விஜய்யை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே!

விஜய்யை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய்யை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். முகமூடி படத்திற்கு பின் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த பூஜா ஹெக்டே, தற்போது ‘தளபதி 65’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே, அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார். அதன்பின் சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் தான் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூற...