சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

Tag: விக்னேஷ் சிவன்

பிரதீப் ரங்கநாதனுடன் இணையும் விக்னேஷ் சிவன் !

பிரதீப் ரங்கநாதனுடன் இணையும் விக்னேஷ் சிவன் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2012ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தை இயக்க விக்னேஷ் சிவன் ...
நயன்தாரா விவகாரம்: அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை – அமைச்சர் பேட்டி!

நயன்தாரா விவகாரம்: அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை – அமைச்சர் பேட்டி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரிய வந்தது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. இதுகுறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதையடுத்து 4 பேர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து விசாரணைக் குழுவிடம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதற்கான ஆதாரங்களை நயன்தாரா - ...
‘கொஞ்சம் பேசினால் என்ன’ படத்தின் டீசரை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

‘கொஞ்சம் பேசினால் என்ன’ படத்தின் டீசரை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
'தும்பா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான கீர்த்தி பாண்டியனும், 'நான் மகான் அல்ல' புகழ் வினோத் கிஷனும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'கொஞ்சம் பேசினால் என்ன'. இப்படத்தை அறிமுக இயக்குனர் கிரி மர்பி இயக்கியுள்ளார். இந்த படத்தில் யூடியூப் பிரபலமான ஆஷிக், செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூப்பர் டாக்கீஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையில் லெனின் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் 'கொஞ்சம் பேசினால் என்ன' படத்தின் டீசரை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வாழ்க்கையில் மீண்டும் சந்திக்கும் பள்ளி நண்பர்கள் இருவர் காதலிப்பதை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. https://twitter.com/VigneshShivN/status/1565294502327160834?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweet...
திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து நெகிழ்ந்த விக்னேஷ் சிவன்!

திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து நெகிழ்ந்த விக்னேஷ் சிவன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வந்த நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அதன்பின், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக தொடங்கியது. பின்னர் காலை 10.25 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார். இவர்களது திருமணத்தில் ம...
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்.. நேரில் வாழ்த்திய திரைப்பிரபலங்கள்!

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்.. நேரில் வாழ்த்திய திரைப்பிரபலங்கள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி திரையுலகில் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 'ஐயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நயன்தாரா படிப்படியாக நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றார். அதே நேரத்தில் விக்னேஷ் சிவன் உதவி இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை தொடங்கியிருந்தார். விக்னேஷ் சிவன் மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் ஹெச்.ஆர்.செக் பள்ளியில் படித்தார். மேலும் அவரது பள்ளியில் நடிகர் சிம்புவின் ஜூனியராக இருந்தார். இந்த அறிமுகம் தான் இவருக்கு முதல் படமான போடா போடியை உருவாக்க உதவியது. சிம்புவின் நட்பால் போடா போடி மூலம் இயக்குனராக அறிமுகமானார். இயக்குனராக நன்கு அறியப்பட்ட விக்னேஷ் எழுத்தாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முக தன்மை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது....
விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண தேதி அறிவிப்பு!

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. சமீபத்தில் நயன்தாரா, சமந்தாவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. நயன் தாராவும் விக்னேஷ் சிவனும் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், இவர்கள் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்கள் திருமணம் திருப்பதி கோவிலில் நடைபெற இருக்கிறது. விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இன்று திருமண மண்டபத்தை முன்பதிவு செய்துள்ளார்கள...
அஜித்துடன் இணையும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா!

அஜித்துடன் இணையும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை மீண்டும் எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் மோகன் லால் அல்லது நாகார்ஜூனா இருவரில் ஒருவர் நடிக்கவுள்ளதாகவும், இவர்களுடன் பாலிவுட் நட்சத்திரங்கள் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது அஜித்குமார் அவர்களின் 62-வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க, நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 'காதுவாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்கி முடித்துள்ள விக்னேஷ் சிவன், அஜித்குமாரின் அடுத்த  படத்தின் பணிகளை தற்போதே தொடங்கி விட்டதாகவும், இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தத் திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்ப...
ரசிகர்களை கவர்ந்த காத்து வாக்குல ரெண்டு காதல் டீசர்!

ரசிகர்களை கவர்ந்த காத்து வாக்குல ரெண்டு காதல் டீசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்திருக்கும் படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”. ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையில் வெளியான மூன்று பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. இப்படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இப்படம் வரும் 2022 ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது....
விஜய் சேதுபதி படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

விஜய் சேதுபதி படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் சேதுபதி படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன்! விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். விஜய் சேதுபதியுடன் இணைந்து சமந்தா மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் பாடல்கள் மற்றும் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டிருக்கிறார். அதன்படி 'காதுவாக்குல ரெண்டு காதல்' படத்தின் டீசர் வரும் 11.02.2022 தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்....
பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா!

பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
பிரபல நடிகர்கள் வசிக்கும் இடத்தில் குடியேறும் நயன்தாரா! நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தயாரிப்பாளராகி படங்களைச் சிறிய அளவில் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் அடுத்தகட்டமாக, விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகத் தெரிகிறது. இதுவரைக்கும் ஐதராபாத், கொச்சி, சென்னை போன்ற இடங்களில் ஹோட்டல்களில் தங்கி படங்களில் நடித்து வந்தார் நயன்தாரா. இந்நிலையில், இருவரும் சென்னை போயஸ் கார்டனில் 4 பெட்ரூம் கொண்ட வீட்டில் குடியேற இருக்கிறார்கள். இதற்காகப் பல கோடி ரூபாய் கொடுத்து இந்த வீட்டை வாங்கியிருக்கிறார்கள். ஏற்கனவே போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரஜினிகாந்த், தனுஷ், இயக்குனர் பாலா உள்ளிட்டோர் வீடுகள் கட்டியுள்ளனர். இப்போது நயன்தாரா தனது காதலருடன் அங்கு வசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இங்குக் குடியேறிய பிறகு தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட இருக்...