வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: விமர்சனம்

ஆண் தேவதை – விமர்சனம்

ஆண் தேவதை – விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  ஆண் தேவதை விமர்சனம் தாமிரா இயக்கத்தில் சமுத்திரகனி நடிப்பில் வெளியாகியிருக்கிற படம் ஆண்தேவதை. படத்தலைப்பே மிக கவிதையாக இருப்பதால் படமும் அப்படியே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கை நிறைய சம்பாதிக்கும் ஐடி நிறுவன ஊழியர்களின் உண்மையான வாழ்க்கையை வெளிச்சம் போட நினைத்திருக்கிறார் இயக்குனர் தாமிரா. பணமும், பகட்டும், மேலைநாட்டு கலாச்சாரமும்தான் வாழ்க்கையின் அங்கீகாரம் என நினைக்கிற கதாநாயகி... சமூக அக்கறை, குழந்தைகள், அளவான வருமானம், அமைதியான வாழ்க்கை, மகிழ்ச்சியான குடும்பம் என வாழ நினைக்கும் கதாநாயகன். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் வாழ்க்கை எப்படி அமைகிறது எப்படி அவர்கள் அமைத்துக் கொள்கிறார்கள் என்பதையும் இன்றைய சூழலை எடுத்து காட்டுகிறார் இயக்குனர். மிக யதார்த்தமான கதையை சமூகத்தில் நடக்கும் அவலத்தை அதே சமூகத்திற்கு எச்சரிக்கை மணியாக செல்ல நினை...
மனுசங்கடா விமர்சனம்

மனுசங்கடா விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
    ரொம்ப நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் யதார்த்தங்களும், வாழ்வியல் நிஜங்களும் திரைப்படங்களாக வந்து உலக சினிமாவுக்கு தமிழ் சினிமாவும் சளைத்தது இல்லை என குரல் எழுப்ப தொடங்கியிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்கி சமீபத்திய பரியேறும் பெருமாள் படம்வரைக்கும் பல படங்கள் இந்த வாழ்வியல் வலியை ரத்தமும் சதையுமான மனிதர்களின் நிஜத்தை செல்லுலாய்டில் பதித்து கண்முன்பாக நிறுத்தியது. அந்த வரிசையில் இணைந்திருக்கிற படம் மனுசங்கடா.... பிழைப்புக்காக கிராமத்தில் இருந்து சென்னையில் வேலை செய்கிற மகன்... ஒரு நள்ளிரவில் திடீரென அப்பா இறந்து விட்டதாக தகவல் வருகிறது. அவசர அவரசமாக கிராமத்துக்கு வருகிறான் மகன். அங்கே இறந்து கிடக்கும் அப்பாவின் உடலை அடக்கம் செய்ய பொதுப்பாதையை பயன்படுத்தக் கூடாது ஆதீக்க ஜாதியினர் தடுக்கிறார்கள். உடலை அடக்கம் செய்யும் வேலையை நிறுத்திவிட்டு சட்டப்படி போ...