திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: 10 crore car

சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் நாளை உத்தரவு

சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் நாளை உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, நடிகர்கள்
    வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நாளை ஐகோர்ட் உத்தரவு பிறப்பிக்கிறது.   நடிகர் தனுஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்தார். இதற்கு வரியாக 60.66 லட்சம் செலுத்துவதற்கு வணிகவரித் துறை உத்தரவிட்டுள்ளது.   இந்நிலையில் இதை எதிர்த்தும், வரி விலக்கு கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 50 சதவீதம் வரி செலுத்தினால் தனுஷின் காரை பதிவு செய்வதற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 3.33 லட்சம் வாரியாக நடிகர் தனுஷ் செலுத்தியதால், விதிமுறை...