சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் நாளை உத்தரவு

 

 

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நாளை ஐகோர்ட் உத்தரவு பிறப்பிக்கிறது.

 

நடிகர் தனுஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிநாட்டு சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்தார். இதற்கு வரியாக 60.66 லட்சம் செலுத்துவதற்கு வணிகவரித் துறை உத்தரவிட்டுள்ளது.

 

இந்நிலையில் இதை எதிர்த்தும், வரி விலக்கு கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 50 சதவீதம் வரி செலுத்தினால் தனுஷின் காரை பதிவு செய்வதற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 3.33 லட்சம் வாரியாக நடிகர் தனுஷ் செலுத்தியதால், விதிமுறைகளை பின்பற்றி காரை பதிவு செய்ய ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு 2016-ம் ஆண்டு ஏப்ரலில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நாளை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அவர்கள் உத்தரவு பிறப்பிக்க உள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் தனுஷ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், வெளிநாட்டு சொகுசு காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டது தவறு, அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது,  50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உயர் நீதிமன்றம், உத்தரவிட்டது. ஆனால், அதற்கு எந்தவித பதிலும் தனுசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.

இநத் வழக்கின் கடந்த விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகாததால், விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்ததுடன், அன்றைய தினம் உத்தரவு பிறப்பிக்கப்படும் கூறப்பட்டது.

அதன்படி தனுஷ் வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.  ஏற்கனவே நடிகர் விஜய் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தனுஷ் வழக்கிலும் உத்தரவு பிறப்பிக்கிறார்

ஏற்கனவே, இதுபோன்ற வழக்கில், நடிகர் விஜயை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம், அவருக்கு ரூ.1 லட்சம்  அபராதம் விதித்தும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

227 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன