வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

Tag: Aishwarya Rajesh

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
'லாக்கப்' எனும் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சொப்பன சுந்தரி'. இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகைகள் லஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா சங்கர், நடிகர்கள் கருணாகரன், சுனில் ரெட்டி, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஜ்மல் தஹ்ஸீன் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையை விஷால் சந்திரசேகர் அமைத்திருக்கிறார். டார்க் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையிலுள்ள பிரபலமான வணிக வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநரும், நடிகருமான மோகன் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்....
ஓடிடி தளத்தில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’!

ஓடிடி தளத்தில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
2021-ஆம் ஆண்டு இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பி மலையாளத்தில் உருவான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்த படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் தமிழில் ரீமேக் செய்துள்ளார். இதில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். மேலும், நடிகர் ராகுல் ரவீந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நாளை (மார்ச் 3) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்...
ஆர்.ஜே. பாலாஜி-ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘ரன் பேபி ரன்’ படத்தின் புதிய அப்டேட் !

ஆர்.ஜே. பாலாஜி-ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘ரன் பேபி ரன்’ படத்தின் புதிய அப்டேட் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தற்போது இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் திரில்லர் படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, எஸ் யுவா ஒளிப்பதிவு செய்கிறார். 'ரன் பேபி ரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் தீம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மற்றும் லவிதா எழுதி பாடியுள்ள இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'ரன் பேபி ரன்' திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. https://youtu.be/4K85nvNYp94...
சிவனாக நடிக்கும் யோகிபாபு படம் ‘பெரியாண்டவர்’

சிவனாக நடிக்கும் யோகிபாபு படம் ‘பெரியாண்டவர்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    டைம் டிராவ்லர் படம்! ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் படத்தில் சிவனாக நடிக்கும் யோகிபாபு படம் 'பெரியாண்டவர்' ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன், பூமராங், தள்ளிப் போகாதே போன்ற பல படங்களை டைரக்ட் செய்த ஆர்.கண்ணன் இயக்கும் 12வது படத்திற்கு "பெரியாண்டவர்" என்று பெயர் வைத்துள்ளார். இவர் இப்பொழுது , ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்', மிர்ச்சி சிவா நடிக்கும் 'காசேதான் கடவுளடா' படங்களை டைரக்ட் செய்து முடித்து, வெளியிடும் வேலைகளை செய்துவருகிறார். இதில் சிவன் வேடம் அணிந்து கதை நாயகனாக நடிக்கிறார் யோகிபாபு. இது ஒரு டைம் டிராவ்லர் படம். வித்தியாசமான கதை அமைப்பில் உருவாகும் இப்படம், யோகிபாபு நடித்த கோலமாவு கோகிலா, கூர்கா, தர்மபிரபு, மண்டேலா பட வரிசையில் இப்படம் அமைந்திருக்கும். நாயகியாக முன்னணி நடிகை தேர்வு மற்றும் உள்ள நட்சத்திர தேர்வு ந...
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'டிரைவர் ஜமுனா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. ‘வத்திக்குச்சி’ படத்தை இயக்கிய இயக்குநர் பா. கின்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தை கவனிக்க, படத்தொகுப்பை ஆர். ராமர் மேற்கொண்டிருக்கிறார். சாலை பயணத்தை மையப்படுத்திய இந்த திரைப்படத்திற்கு ஒலியின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதால், படத்தின் ஒலி வடிவமைப்பை, முன்...
சூர்யா – பாலா கூட்டணியில் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

சூர்யா – பாலா கூட்டணியில் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சூர்யா - பாலா கூட்டணியில் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்! நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதுவரை அவர் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2, கடைக்குட்டி சிங்கம், பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அடுத்ததாக நடிகர் சூர்யா தயாரிக்க உள்ள படத்தை பாலா இயக்க உள்ளார். அப்படத்தில் அதர்வா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற டிசம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்...
நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் கைவசம் டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக், துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கில் ரிபப்ளிக், பீம்லா நாயக் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் உடன் கூட்டணி அமைக்க உள்ளார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப...
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உதவி!

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உதவி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் உதவி! தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ். முருகன் கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததோடு அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தனது சொந்த செலவில் 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். அதையடுத்து நடிகை ஜெயசித்ரா 200க்கு மேற்பட்ட நடிகர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிலையில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து வாடும் நடிகர்களுக்கு உதவும் வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய். ஒரு லட்சமும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூபாய். 50 ஆயிரமும், நடிகை லதா 25 ஆயிரமும் நடிகர் விக்னேஷ் 10 ஆயிரமும் வழங்கியுள்ளனர். இவை அனைத்தும் நேரடியாக நடிகர் சங்க வங்கிக் கணக்கி...
‘அடங்காதே’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

‘அடங்காதே’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
‘அடங்காதே’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்! காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவரையும் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும், கா/பெ ரணசிங்கம் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் இவர், துருவ நட்சத்திரம், திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், மோகன் தாஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்தும் கொண்ட படமாக உருவாகும் இதில் சமுத்திரகனி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தை இயக்குனர் சண்முகம் முத்து...
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்! சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், புஷ்பா படத்தில், அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....