புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: Amitabh Batchan

பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனின் பிறந்த நாளுக்கு வித்தியாசமாக வாழ்த்திய பட குழு!

பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனின் பிறந்த நாளுக்கு வித்தியாசமாக வாழ்த்திய பட குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பாலிவுட் திரையுலகின் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனின் எண்பதாவது பிறந்தநாளான நேற்று, 'புராஜெக்ட் கே' படக்குழுவினர் பிரத்யேகமான போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பான் இந்திய சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே'. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தயாரிப்பில் இருக்கும் இந்த படத்தில் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரித்து வருகிறார். நேற்று அமிதாப்பச்சனின் எண்பதாவது பிறந்த நாள். இதனை கொண்டாடும் வகையில் 'புராஜெக்ட் கே' படக் குழுவினர் அமிதாப்பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் வலிமையை உணர்த்தும் வகை...
அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு !

அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு !

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி உள்ளது. இந்நிலையில் இந்தி திரையுல சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 79 வயதான அமிதாப் பச்சனுக்கு நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள அமிதாப், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு கூர்ந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். எனினும் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளாரா அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாரா என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல்முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமிதாப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபின் குணமடைந்தது...
அவருடன் நடிப்பது கனவு போல் இருக்கிறது – பிரபாஸ்!

அவருடன் நடிப்பது கனவு போல் இருக்கிறது – பிரபாஸ்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர் பிரபாஸ் நடித்திருக்கும் ராதே ஷ்யாம் வெளியாக இருக்கும் நிலையில் அவர் பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அதன் படப்பிடிப்பில் சமீபத்தில் கலந்து கொண்டிருக்கிறார். இவருடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் நடிக்கச் சம்மதித்திருக்கிறார். முதல் நாள் படப்பிடிப்பில் அமிதாப் கலந்து கொண்டதை மிகவும் மகிழ்ச்சியோடு நினைவுபடுத்தி அமிதாப்பச்சனோடு நடிப்பது எனக்குக் கனவு போல் இருக்கிறது என்று தீவார் படத்தில் அமிதாப்பின் கலக்கலான புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் பிரபாசின் ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இப்படம் விஞ்ஞானமும், கற்பனையும் சேர்ந்த திரைக்கதையாக உருவாக இருக்கிறது....