திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

அவருடன் நடிப்பது கனவு போல் இருக்கிறது – பிரபாஸ்!

நடிகர் பிரபாஸ் நடித்திருக்கும் ராதே ஷ்யாம் வெளியாக இருக்கும் நிலையில் அவர் பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அதன் படப்பிடிப்பில் சமீபத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.
இவருடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் நடிக்கச் சம்மதித்திருக்கிறார்.
முதல் நாள் படப்பிடிப்பில் அமிதாப் கலந்து கொண்டதை மிகவும் மகிழ்ச்சியோடு நினைவுபடுத்தி அமிதாப்பச்சனோடு நடிப்பது எனக்குக் கனவு போல் இருக்கிறது என்று தீவார் படத்தில் அமிதாப்பின் கலக்கலான புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் பிரபாசின் ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இப்படம் விஞ்ஞானமும், கற்பனையும் சேர்ந்த திரைக்கதையாக உருவாக இருக்கிறது.
486 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன