திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: Anjali

இயக்குனர் ராம் படத்தின் அப்டேட் கொடுத்த யுவன் !

இயக்குனர் ராம் படத்தின் அப்டேட் கொடுத்த யுவன் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2007-ஆம் ஆண்டு வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதன்பிறகு 'தங்கமீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது நிவின் பாலி நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டைட்டில் லுக் அக்டோபர் 11-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் ...
கவர்ச்சி காட்டும் அஞ்சலி !

கவர்ச்சி காட்டும் அஞ்சலி !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
'அங்காடி தெரு' படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறிய அவர், தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அஞ்சலி நடிப்பில் கடைசியாக வெளியான சைலன்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் ஆர்சி15 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தெலுங்கு நடிகர் நிதின் நடிப்பில் உருவாகி வரும் 'மச்சேர்லா நியோஜகவர்கம்' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு அஞ்சலி கவர்ச்சி நடனம் ஆடியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த போஸ்டர் ஒன்றை ச...
ராம் இயக்கத்தில் நிவின்பாலி அஞ்சலி நடிக்கும் புதிய படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்!

ராம் இயக்கத்தில் நிவின்பாலி அஞ்சலி நடிக்கும் புதிய படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  *ராம் இயக்கத்தில் நிவின்பாலி அஞ்சலி நடிக்கும் புதிய படம் அறிவிப்பு* 'அமைதிப்படை-2', 'கங்காரு', 'மிக மிக அவசரம்' உள்ளிட்ட படங்களை தயாரித்த வி ஹவுஸ் நிறுவனம் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா நடிப்பில் 'மாநாடு' என்கிற படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த நிலையில் தனது அடுத்த தயாரிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வி ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார். இந்த புதிய படத்தை 'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்', 'பேரன்பு' உள்ளிட்ட ஆத்மார்த்தமான படங்களை இயக்கிய இயக்குநர் ராம் இயக்குகிறார். 'பிரேமம்' படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொண்ட, மலையாள திரையுலகில் இளம் முன்னணி நாயகனாக வலம்வரும் நடிகர் நிவின்பாலி இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அஞ்சலி கதாநாயகியாக நடிக்க, சூரி முக்கிய...
நடிகை அஞ்சலிக்கு திருமணமா?

நடிகை அஞ்சலிக்கு திருமணமா?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
நடிகை அஞ்சலிக்கு திருமணமா? தமிழில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் வக்கீல் சாப் படம் வந்தது. தற்போது தமிழில் பூச்சாண்டி மற்றும் தெலுங்கில் 2 படங்கள் கன்னடத்தில் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார். அஞ்சலிக்கு 34 வயது ஆகிறது. ஏற்கனவே நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் பேசினர். அஞ்சலி அளித்த பேட்டியொன்றில் நான் காதலித்தது உண்மைதான். ஆனால் அந்த காதல் நிறைவேறவில்லை. தோல்வியில் முடிந்து விட்டது என்றார். காதலித்தவர் பெயரை வெளிப்படுத்தவில்லை. ...
கொரானா குவாரண்டைன் நேரத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்த அஞ்சலி!

கொரானா குவாரண்டைன் நேரத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்த அஞ்சலி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    கொரானா குவாரண்ட்டைன் நேரத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்த அஞ்சலி! கொரானா பொது முடக்க காலத்தில் நடிகை அஞ்சலி இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் வீடியோ காலில் ஒரு காட்சிக்கு டப்பிங் பேசியுள்ளார். டப்பிங் பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் அஞ்சலி வெளியிட்டதைத் தொடர்ந்து அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கொரானா பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அத்தியாவசிய பணிகளைத் தவிர சினிமா படப்பிடிப்புகள், சீரியல் படப்பிடிப்புகள் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டன. 5-ம் கட்ட பொது முடக்க அறிவிப்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிபந்தனைகள் கட்டுப்பாடுகளுடன் டிவி சீரியல் படப்பிடிப்புகள், சினிமா போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது அனுஷ்கா ஷெட்டி, மாதவன் ஆகியோருடன் இணைந்து நிசப்தம் என்ற படத்தில் அஞ்சலி நடித்துள்ளார். இந்தப் படத்தில் அஞ்...
திருடனோட கூட்டணி போட்ட விஜய்சேதுபதி மகன் – சிந்துபாத் ரகசியம்

திருடனோட கூட்டணி போட்ட விஜய்சேதுபதி மகன் – சிந்துபாத் ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இதுவரை குட்டி குட்டிப் பாத்திரங்களில் எட்டிப்பார்த்து வந்த நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா  அவரது ‘சிந்துபாத்’முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ள நிலையில்  படத்தில் அவரது கேரக்டர் என்ன என்கிற ரகசியத்தை உடைத்திருக்கிறார் இயக்குநர் அருண்குமார். ‘பண்ணையாரும் பத்மினியும்’,’சேதுபதி’ ஆகிய இரு படங்களை ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து இயக்கியுள்ள அருண்குமார் மூன்றாவதாக இயக்கிவரும் படம் ‘சிந்துபாத்’.இப்படத்தில் அஞ்சலி வி.சே.வுக்கு ஜோடியாக நடிக்க அவரது மகன் சூர்யா முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்து கதையை எழுத ஆரம்பிக்கும்போதே அந்தக் கேரக்டர்ல சூர்யாவைத்தான் நடிக்க வைக்கணும்ங்குறதுல உறுதியா இருந்தேன். நிறையப் பேர் எங்களைக் கேக்காமலே சூர்யா இந்தப் படத்துல விஜய் சேதுபதியோட மகனாவே நடிக்கிறதா எழுதுறாங்க. அது உண்மையில்ல.  படத்துல பயங்கர தில்லாலங்கடி திருடன் கேரக்டர்...