நான் தளபதியாக இருக்க வேண்டுமா அல்லது தலைவனாக மாற வேண்டுமா என்பதை ரசிகர்களும், காலமும்தான் முடிவு செய்யும் – விஜய் அசத்தல் பதில்
என்னை தளபதியாக்கியது ரசிகர்கள்தான். நான் தளபதியாக இருக்க வேண்டுமா அல்லது தலைவனாக மாற வேண்டுமா என்பதை ரசிகர்களும்,
காலமும்தான் முடிவு செய்யவேண்டும்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்தப் படம் வரும் 13-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
வழக்கமாக விஜய் படங்களுக்கு மிகப்பெரிய அளவில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறும். அந்த நிகழ்ச்சியின்போது விஜய் பேசும் விவகாரம் அரசியல் களத்தில் பேசுபொருளாவது வழக்கம்.
இந்தமுறை ஆடியோ வெளியீட்டு விழா வைக்காத விஜய்யின் ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளாகியது.
அதன் காரணமாக விஜய் சன் டிவியில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்சன் நெறியாளராக இருந்து கேள்விகளை கேட்டார்.
சன் தொலைக்காட்சி இன்று 9 மணிக்கு வெள...

