நடிகர் விஜய் வரிவிலக்கு கேட்டது உரிமை இதில் சமூக நீதி என்பது எங்கு வந்தது? -முன்னாள் நீதிபதி சந்துரு
நடிகர் விஜய் வரிவிலக்கு கேட்டது உரிமை இதில் சமூக நீதி என்பது எங்கு வந்தது? -முன்னாள் நீதிபதி சந்துரு
சமூக நீதிக்குப் பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், ரீல் ஹூரோவாக இருக்ககூடாது எனவும் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது என்று இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு சுங்கவரி செலுத்திய நிலையில், நுழைவு வரி வசூலிக்கத் தடைக் கோரியிருந்த நடிகர் விஜய்யின் மனு மீதான விசாரணையின் போது நீதிபதி எம்.எஸ் சுப்ரமணியம் கூறிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் முன்னாள் நீதிபதி சந்துரு இதற்கு மாறுபட்ட கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
வரியில் இருந்து விதிவிலக்கு கேட்கிறார்கள் என்பது இந்தியக்குடிமக்கள் ஒவ்வொருவரின் உரிமையாகும். ஏழை முதல் பெரிய பணக்காரர்கள் வரை அனைவருக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உரிமை உண்டு. இதன்பேரில் தான் நடிகர் விஜய்யும் வரிவிலக்க...
