முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றடைந்தார்!
துபாயில் கடந்த அக்டோபா் 1-ல் தொடங்கிய சா்வதேச தொழில் கண்காட்சி மாா்ச் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இங்கு மாா்ச் 25 முதல் 31 வரை தமிழ்நாடு வாரமாக கண்காட்சியில் உள்ள தமிழ்நாடு அரங்கில் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், துபாய் எக்ஸ்போவில் பங்கேற்க அரசுமுறை பயணமாக சென்னையில் இருந்து இன்று மாலை தனி விமானத்தில் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றடைந்தார்.
துபாய் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அந்நாட்டிற்கான இந்திய தூதர் அமன் பூரி வரவேற்றார்.
துபாய் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரங்கை நாளை நேரில் சென்று திறந்து வைக்கிறாா்
https://www.youtube.com/watch?v=QxyC5nG5XkI
துபாயில் உள்ள முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரிகளுடனான சந்திப்பு, வா்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் தலைவா்களுடனான சந்திப்பு ஆகியனவும் நடைபெறவுள்ளன. ...
