60 மாடி கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட “மிஸ் அமெரிக்கா” அழகி
"மிஸ் அமெரிக்கா" பட்டம் வென்ற அழகி 60 மாடி கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கட்நத 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ‘மிஸ் அமெரிக்கா’ அழகிப் போட்டியில் பட்டம் வென்றவர் செஸ்லி கிரிஸ்ட் (வயது 30).
இவர் மாடலிங் துறையிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி வந்தார்.
செஸ்லி கிரிஸ்ட், நியூயார்க் மாகாணத்தில் உள்ள மென்ஹெண்டன் நகரில் 60 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 9வது மாடியில் வசித்து வந்தார்.
இந்நிலையில், தான் வசித்து வந்த 60 மாடி கட்டடத்தில் இருந்து கீழே குதித்து செஸ்லி கிரிஸ்ட் இன்று தற்கொலை செய்து கொண்டார்.
அவர் கடைசியாக கட்டடத்தின் 29வது மாடியில் நின்று கொண்டிருந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளது.
இதனால், அவர் கட்டடத்தின் 29வது மாடியில் இருந்தே கீழே குதித்து தற்கொலை செய...
