133 பேருடன் சென்ற சீன விமானம் மலையில் மோதி விபத்து!
133 பேருடன் சென்ற சீன விமானம் மலையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சீனாவின் குன்மிங் மாகாணத்தில் இருந்து குவாங்சோ மாகாணத்திற்கு, 133 பேருடன் இந்திய நேரப்படி காலை10.41-க்கு ஜெட் விமானம் புறப்பட்டு சென்றது.
காலை 11.52 மணியளவில் விமானம் 3,225 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, ரேடாரில் இருந்து விமானத்தின் தகவல்கள் துண்டிக்கப்பட்டன.
மதியம் 12.35-க்கு குவாங்சோ மாகாணத்தை விமானம் சென்றடைய வேண்டிய நிலையில், விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகின.
விமானம் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், குவாங்சி மாகாணத்தில், வுசோ நகரத்திற்கு அருகே உள்ள மலை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது உறுதி செய்யப்பட்டது.
முதற்கட்ட தகவல் அடிப்படையில் விபத்தில் சிக்கியவர்களில் யா...

