சந்தாதாரர்களுக்கு திரைப்பட டிக்கட்டுகளை இலவசமாக வழங்கவுள்ள புதிய ஒடிடி தளம்!
சந்தாதாரர்களுக்கு இலவச திரைப்பட டிக்கட்டுகளை வழங்கவுள்ள theaterhoods.com
அமெரிக்காவை சேர்ந்த பொழுதுபோக்கு நிறுவனமான எமோஷனல் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க், “theaterhoods.com” (தியேட்டர்ஹுட்ஸ்.காம்) என்ற புதிய ஒடிடி தளத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் செயல்பாடுகளை இந்தியாவில் விரிவுபடுத்துகிறது.
தியேட்டர்ஹுட்ஸ் இந்திய மண்டல மார்க்கெட்டிங் தலைவர் பிரசாத் வசீகரன் கூறுகையில், "இந்திய சினிமா ரசிகர்களை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். ஒரு இந்தியனாக நமது திரைப்படங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.
இது நம் வாழ்க்கையின் ஒரு பகுதி, நமது ரத்தத்தில் கலந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. எங்கள் பயனர்கள் ஒவ்வொரு நொடியும் அவர்கள் விரும்பும் முறையில் உள்ளடக்கத்தை ரசிக்க செய்வதே எங்கள் முதன்மையான குறிக்கோள் ஆகும்," என்றார்.
"உலகத்தரம...
