ஞாயிற்றுக்கிழமை, மே 12
Shadow

Tag: G.V.Prakash

‘மார்கழி திங்கள்’படப்பிடிப்பை தொடங்கிய மனோஜ் பாரதிராஜா!

‘மார்கழி திங்கள்’படப்பிடிப்பை தொடங்கிய மனோஜ் பாரதிராஜா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
1999-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'தாஜ்மகால்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. இதைத்தொடர்ந்து, 'சமுத்திரம்','வருஷமெல்லாம் வசந்தம்', 'அல்லி அர்ஜுனா', உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'மார்கழி திங்கள்'. புதுமுகங்களை கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 'மார்கழி திங்கள்' படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது...
செல்ஃபி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

செல்ஃபி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் உருவாகி வரும் ‘செல்ஃபி’ படத்தை இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். கல்லூரி மாணவராக ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடித்துள்ளார். மேலும் இயக்குனர் கவுதம் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாசுடன் கவுதம் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்....
நடிகர் விஷாலுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்!

நடிகர் விஷாலுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விஷாலுடன் இணைந்த ஜி.வி.பிரகாஷ்! நடிகர் விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து அவர் மார்க் ஆண்டனி என பெயர் சூட்டப்பட்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஷாலின் 33வது படமான இதை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. விஷாலுடன் இப்படத்தில் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான அசுரன், சூரரைப் போற்று போன்ற படங்களின் இசை வெற்றியை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கப்போகும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இ...
ஜி.வி.பிரகாஷுடன் மோதும் சாண்டி!

ஜி.வி.பிரகாஷுடன் மோதும் சாண்டி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜி.வி.பிரகாஷுடன் மோதும் சாண்டி! தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ், படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் தற்போது ‘பேச்சிலர்’ படம் தயாராகி வருகிறது. டில்லிபாபு தயாரித்துள்ள இப்படத்தை சதிஸ் செல்வகுமார் இயக்கி இருக்கிறார். இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக இளம் நடிகை திவ்ய பாரதி நடித்துள்ளார். மேலும் முனிஷ்காந்த், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அன்றைய தினத்தில் நடன இயக்குனர் சாண்டி நடிப்பில் உருவாகி இருக்கும் 3.33 (மூணு முப்பத்தி மூணு) திரைப்படமும் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாம்பூ ட்ரீஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு அறிமுக இயக்குனர் நம்பிக்கை சந்துரு இயக்கி இருக்கிறார்....
ஜி.வி.பிரகாஷுக்கு புது பட்டம் கொடுத்த சீனு ராமசாமி!

ஜி.வி.பிரகாஷுக்கு புது பட்டம் கொடுத்த சீனு ராமசாமி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜி.வி.பிரகாஷுக்கு புது பட்டம் கொடுத்த சீனு ராமசாமி! தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘இடிமுழக்கம்’. ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், சுபிக்‌ஷா, செளந்தரராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்தது. இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், “இடிமுழக்கம் படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது, திருவிழா முடிந்து பள்ளிக்கு செல்லப் போகும் மாணவனை போல சென்னை வருகிறேன். இந்த அழகான நாட்களை நினைவுகளாக எனக்கு தந்த சீனு ராமசாமிக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார். ஜி.வி.பிரகாஷின் பதிவுக்கு பதிலளித்து டுவிட் செ...
ஜி.வி.பிரகாஷ் – கவுதம் மேனன் முதன்முறையாக இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

ஜி.வி.பிரகாஷ் – கவுதம் மேனன் முதன்முறையாக இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜி.வி.பிரகாஷ் - கவுதம் மேனன் முதன்முறையாக இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு! தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தை இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘செல்ஃபி’ என பெயரிடப்பட்டு உள்ளது. இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடித்துள்ளார். மேலும் இயக்குனர் கவுதம் மேனனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாசுடன் கவுதம் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்‌ஷன் கலந்து திர...
தனுஷ் நடிக்கும் ‘டி43’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ் நடிக்கும் ‘டி43’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தனுஷ் நடிக்கும் ‘டி43’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு! துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக தனுஷின் 43-வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்நிலையில், டி43 படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி நடிகர் தனுஷின் பிறந்தநாள், நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் காலை 11 மணிக்கு ‘டி43’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அப்படத்தின் தலைப்பும் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்...
சர்ச்சை காட்சிகள்… ஜி.வி.பிரகாஷ் படத்தில் 10 நிமிட காட்சி நீக்கம்!

சர்ச்சை காட்சிகள்… ஜி.வி.பிரகாஷ் படத்தில் 10 நிமிட காட்சி நீக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சர்ச்சை காட்சிகள்... ஜி.வி.பிரகாஷ் படத்தில் 10 நிமிட காட்சி நீக்கம்! ஷண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சுரபி ஜோடியாக நடித்துள்ள அடங்காதே படத்தை சமீபத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்பினர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் நடிகர் ரஜினி கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவதாக அறிவித்த விஷயங்களை விமர்சிப்பது போன்ற சர்ச்சை காட்சிகள் படத்தில் இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினி தரப்பில் தேர்தல் கமிஷனில் பதிவு செய்ததாக கூறப்பட்ட கட்சி பெயரையும் படத்தில் குறிப்பிட்டு இருந்ததாக அதிருப்தி வெளியிட்டனர். படத்துக்கு சான்றிதழ் அளிக்கவும் மறுத்தனர். பின்னர் அடங்காதே படக்குழுவினர் மறு தணிக்கைக்கு படத்தை கொண்டு சென்றனர். அங்கும் ரஜினிகாந்த் அரசியலை கேலி செய்வது போன்ற காட்சிகள் படத்தில் இருப்பதாகவும், அதனை நீக்க வேண்டும் என்றும் தணிக்கை குழுவினர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ரஜினிகா...
சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யா படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்! சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கிய இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை அடுத்து நவரசா என்ற ஆந்தாலஜியில் கவுதம்மேனன் கதையில் நடித்துள்ளார் சூர்யா. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதனிடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஜல்லிக்கட்டு தொடர்பான படம் என்பதாலும் சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி முதல்முறையாக இணைந்திருப்பதாலும் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. பாண்டிராஜ் படத்தை முடித்த பின்னர் வெற்றிமாறன் படத்தில் சூர்யா இணைவார் என தெரிகிறது. இந்ந...
தமிழ் புத்தாண்டன்று நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் ஜிவி பிரகாஷ் படம்!

தமிழ் புத்தாண்டன்று நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் ஜிவி பிரகாஷ் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
தமிழ் புத்தாண்டன்று நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் ஜிவி பிரகாஷ் படம்! கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு ஊரடங்கு போடப்பட்டதை அடுத்து, ஓடிடி-யில் படங்கள் நேரடியாக வெளியிடப்பட்டன. அதேபோல் யோகிபாபுவின் ‘நாங்க ரொம்ப பிஸி’, ‘மண்டேலா’, விக்ரம் பிரபுவின் ‘புலிக்குத்தி பாண்டி’, சமுத்திரகனியின் ‘ஏலே’ ஆகிய படங்கள் நேரடியாக டி.வி.யில் வெளியிடப்பட்டன. அந்த வகையில் தற்போது நேரடி டி.வி. வெளியீட்டிற்காக தயாராகி உள்ள படம் ‘வணக்கம்டா மாப்ள’. ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை ராஜேஷ் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர். இப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். மேலும் ஆனந்தராஜ், ரேஷ்மா, டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், ‘வணக்கம்டா மாப்ள’ படத்தின் வெளிய...