புதன்கிழமை, ஆகஸ்ட் 5
Shadow

Tag: governor

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றிவைத்த கவர்னர்!

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றிவைத்த கவர்னர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  நாடு முழுவதும் 73ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவப்பட்டது. பின்னர், அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றார்.   இந்நிலையில், 2022 ஆம் ஆண்டிற்கான தமிழகத்தின் அனைத்து மாநகரங்கள் மற்றும் மாவட்டங்கள் ஆகியவற்றில் உள்ள காவல் நிலையங்களில் மிகவும் சிறப்பாக பணிகளை செய்தல் குற்றங்களை குறைத்தல், உடனடியாக நடவடிக்கை எடுத்தல் போன்றவற்றில் மத்திய அரசின் மூலம் வரையறுக்கப் பட்ட திறநளவிகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் சிறந்த காவல் நிலையத்திற்கு முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் அரசால் வழங்கப்பட்டன. அதில் தமிழகத்திலேயே சிறந்த காவல் நிலையமாக முதலிடம் பிடித்த திருப்பூர் மாநகரத்தை சேர்ந்த திருப்பூர் தெ...
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பிரதான கட்சிகள் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சூறாவளி பிரசாரத்தை தொடங்குகிறார். இந்த நிலையில், தேர்தல் பிரசாரம் தொடர்பாக நேற்று முன்தினம் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, ‘அ.தி.மு.க.வை நிராகரிப்போம்’ என்ற பிரசார இயக்கத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தொடங்கிய முதல் 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதில் பதிவிட்டுள்ளனர். நாளை (புதன்கிழமை) முதல் 10 நாட்கள் தி.மு.க.வை சேர்ந்த 1,600 நிர்வாகிகள், 16 ஆயிரம் கிராமங்களில், கிராம சபை கூட்டத்தை நடத்த உள்ளனர். அதில், அ.தி.மு.க. அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்ட...
ஆளுநர் மாளிகையின் கன்னத்தில் விழுந்த அறை – வைகோ

ஆளுநர் மாளிகையின் கன்னத்தில் விழுந்த அறை – வைகோ

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஆளுநர் மாளிகையின் கன்னத்தில் விழுந்த அறை செய்தியாளர்களிடம் வைகோ சங்கொலி வாரப் பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில் நானும் பத்திரிகையாளர் என்பதால் உங்களிடம் பேசுகிறேன். பத்திரிகைத் துறையை மிரட்டி அச்சுறுத்தி பயமுறுத்தி ஏழு வருடம் சிறைக்கு அனுப்பக் கூடிய பிரிவுகளில் வழக்கு போட்டு ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்து பேச்சுரிமை, கருத்துரிமையைப் பறித்து விடலாம் என்று ஆளுநர் மாளிகை திட்டமிட்டு சுயமரியாதையை இழந்து விட்ட முதுகெலும்பற்ற அ.தி.மு.க. அரசின் காவல்துறையைப் பயன்படுத்தி நக்கீரன் வார இதழின் ஆசிரியர் கோபால் அவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 124 ஆவது பிரிவின் கீழ் ஆளுநரையோ குடியரசுத் தலைவரையோ வேலை செய்ய விடாமல் தடுக்கின்ற சட்டப்பிரிவு 124-இன்படி ஏழு வருடம் சிறைக்கு அனுப்பலாம். அந்தப் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் இருக்கின்ற ஒரு அதிகாரி டெபுடி செக்ரட்டரி...
நக்கீரன் கோபால் மீதான வழக்கு செல்லாது!

நக்கீரன் கோபால் மீதான வழக்கு செல்லாது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நக்கீரன் வாரப் பத்திரிகையின் ஆசிரியர் கோபால். இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். அப்போது சென்னை போலீசார் அவரை திடீரென கைது செய்தனர். விமான நிலையத்தில் வைத்து சிறிது நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் சிந்தாதிரிப் பேட்டை போலீஸ் நிலைய மாடியில் உள்ள திருவல்லிக்கேணி துணை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து நக்கீரன் பத்திரிகையில் செய்திகள் வெளியானது. அதில் கவர்னர் மாளிகையை தொடர்புபடுத்தி எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி கவர்னர் ம...
கவர்னர் பன்வாரிலால் புரோகித் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

கவர்னர் பன்வாரிலால் புரோகித் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசினார். கனமழை எச்சரிக்கை, அரசியல் சூழல் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசியதாக கூறப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ள நிலையில், அது தொடர்பாகவும், கருணாஸ் விவகாரம் பற்றியும் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....