சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: IMD

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை!

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை! வளிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், உள்மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், நாமக்கல், விழுப்புரம், தூத்துக்குடி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடிமின்னலுடன் மழை பெய்து வருகிறது. சென்னையில் அண்ணாசாலை, பாரிமுனை, மெரினா, எழும்பூர் தி.நகர், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், கோயம்பேடு, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக வெயிலின் உஷ்ணத்தால் அவதி அடைந்த சென்னைவாச...
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். நீலகிரி, கோவை, கடலோர மாவட்டங்கள் மற்றும் ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். நாளை நீலகிரி, கோவை, கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் 20-ந் தேதி தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யும். 21, 22-ந் தேதிகளில் ஒருசில வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பக...
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி 21-ந் தேதி உருவாகிறது!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி 21-ந் தேதி உருவாகிறது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி 21-ந் தேதி உருவாகிறது! தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் பெய்கிறது. சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்கிறது. இதனால் மண்ணில் ஈரப்பதம் ஏற்பட்டு குளிர்ந்த காற்று வீசுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஏரி, குளங்களிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் 2 நாட்களுக்கு சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகிற 21-ந் தேதி உருவாகிறது. இதனால் கேரளா, கர்நாடகா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் ...
2-ந்தேதி முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்!

2-ந்தேதி முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்!

HOME SLIDER, NEWS, உலகம், செய்திகள்
தமிழகத்தில் சில மாவட்டங்களில் 2-ந்தேதி முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்! தமிழகத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று அதிகமாக பதிவாகி இருந்தது. அதிலும் வடகிழக்கு பருவமழை வழக்கமாக நிறைவடையும் டிசம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் 2-வது வாரம் வரை மழை பெய்தது. அதன் பின்னர், லேசான பனிப்பொழிவின் தாக்கம் தமிழகத்தின் சில இடங்களில் இருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவத்தொடங்கியது. தொடர்ச்சியாக வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகரிக்க ஆரம்பித்தது. இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து வெயில் தன்னுடைய கோர முகத்தை காட்ட தொடங்கி இருக்கிறது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. வருகிற 2-ந்தேதி முதல் மேலும் சில மாவட்டங்களில் ...