செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

Tag: JaiBhim

வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது… சூர்யா!

வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது… சூர்யா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது... சூர்யா! த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அது தொடர்பான அறிக்கையை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக 'ஜெய் பீம்' படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரி வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் மூலம் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலு...
ஜெய்பீம் எதிர்ப்பு எதிரொலி – சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு!

ஜெய்பீம் எதிர்ப்பு எதிரொலி – சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், நடிகர்கள்
ஜெய்பீம் எதிர்ப்பு எதிரொலி - சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு! நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. பா.ம.க. சார்பில் அந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போட கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். இதன்பேரில் தியாகராயநகர் ஆற்காடு சாலையில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு நேற்று இரவில் இருந்து துப்பாக்கி ஏந்திய 5 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். சூர்யாவுக்கு தனிப்பட்ட முறையில் துப்பாக்கியுடன் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். அவர் வெளியில் செல்லும் போது அந்த போலீசார் உடன் செல்வார்கள...