முதல் நாள் வசூல் 100 கோடியை தாண்ட வேண்டுமாம் பெரும் எதிர்பார்ப்பில் ஜவான்!
*தென்னிந்தியாவில் சாதனைகள் படைக்க காத்திருக்கும் ஷாருக்கானின் “ஜவான்” திரைப்படம் !!*
வட இந்தியாவில் சாதனைகள் செய்து, பாகுபலி படம் முதல் நாளில் 100 கோடியைக் குவித்தது போல், ஷாருக்கானின் “ஜவான்” திரைப்படம் தென்னிந்தியாவில் சாதனைகள் செய்து, முதல் நாளில், 100 கோடி ரூபாயைத் தாண்டி வசூலிக்கும் - வர்த்தக வட்டாரங்கள் கணிப்பு !
வடக்கில் பாகுபலி செய்ததைப் போல, ஷாருக்கானின் ஜவான் தெற்கில் ரிலீஸ் நாள் சாதனைகளை முறியடிக்கும்! வசூலில் ரூ. 100 கோடியைத் தாண்டும் என வர்த்தக ஆய்வாளர்கள் கணிப்பு !
கிங்க்கான் ஷாருக்கான் நடிப்பில், இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் "ஜவான்". ரசிகர்கள், பார்வையாளர்கள் மட்டுமின்றி வர்த்தக வட்டாரங்களிலும் இப்படம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
சமீபத்திய வெளியான ப்ரிவ்யூ, கிங் கானை முரட்டுத்தனமான மற்றும் இதுவரை கண்டிராத அவதாரத்தில் ...
