திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: Jayalalithaa

ஜெ., மரண விசாரணை கிடுக்கிப்பிடி கேள்விகளால் தடுமாறும் ஓபிஎஸ்!

ஜெ., மரண விசாரணை கிடுக்கிப்பிடி கேள்விகளால் தடுமாறும் ஓபிஎஸ்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  ஜெ., மரண விசாரணை கிடுக்கிப்பிடி கேள்விகளால் தடுமாறும் ஓபிஎஸ்! முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் ஆஜராகி இருந்தார். அவரிடம் சுமார் மூன்றரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் அவரிடம் நாளையும் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 மணி நேரத்திற்கு மேலாக இன்று நடைபெற்ற விசாரணையில் அவரிடம் சுமார் 78 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் தரப்பில் சில விளக்கங்களும் பதில்களும் அளிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற விசாரணையில், “அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில் அண்ணா, எம்.ஜி.ஆர் போல ஜெயலலிதாவையும் வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என அப்போதைய சுகாதாரத்துறை...
ஏ.எல்.விஜய்  ‘தலைவி’ பட டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

ஏ.எல்.விஜய் ‘தலைவி’ பட டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, திரைப்படங்கள், நடிகைகள்
ஏ.எல்.விஜய் 'தலைவி' பட டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தலைவி படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற மார்ச் 23-ந் தேதி நடிகை கங்கனா ரணாவத்தின் பிறந்தநாளன்று தலைவி படத்தின் டிரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தலைவி படம் வருகிற ஏப்ரல் 23-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக...
ஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை… ஆனால்

ஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை… ஆனால்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
ஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை... ஆனால் சென்னை ஐகோர்ட்டில் தீபா, தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், ஜெயலலிதா இறந்த பின், தங்களை வாரிசுகளாக அறிவித்துள்ள நிலையில் வேதா நிலையத்தையும், அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்க சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டம் இயற்ற அதிகாரமில்லை. வேதா இல்லத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும். நினைவு இல்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், போயஸ் தோட்ட இல்லம் ஜெயலலிதா நினைவில்லமாக பொதுமக்கள் பார்வைக்கு நாளை திறக்கப்பட உள்ளதாக அரசுத்தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டில் இன்று தீபா, தீபக் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நாளை வேதா இல்லம் திறக்கப்படவிருப்பதால் இதனை அவசர வழக்க...
சசிகலா விடுதலை தேதியை இப்போது சொல்லமுடியாது – பெங்களூர் சிறைத்துறை தகவல்

சசிகலா விடுதலை தேதியை இப்போது சொல்லமுடியாது – பெங்களூர் சிறைத்துறை தகவல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சசிகலா விடுதலை தேதியை இப்போது சொல்லமுடியாது - பெங்களூர் சிறைத்துறை தகவல் இந்திய அரசியல் வரலாற்றில் முன்னாள் முதல்வர் ஜெ., சொத்து குவிப்பு வழக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. பல ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் ஜெ. இறந்து விட்டதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டனை காலம் வருகிற 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. ஆனால் அவர்கள் அதற்கு முன்பாகவே விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் டி.நரசிம்மூர்த்தி, சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டிருந்தார். அவரது இந்த கேள்விக்கு...