அமெரிக்க அதிபராக நாளை பதவி ஏற்க உள்ள ஜோ பைடன்
நாளை அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் அதிக வயதான அதிபர் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார்.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டொனால்ட் டிரம்ப் தோல்வி அடைந்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். நாளை ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார். இதற்காக மிகத் தீவிரமாக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அவர் தேர்தலில் வெற்றி பெற்றும் டொனால்ட் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் மிகவும் இழுத்தடித்து தற்போது வேறு வழியில்லாமல் ஒதுங்கி உள்ளார்.
தற்போது பதவி ஏற்க உள்ள ஜோ பைடனுக்கு நவம்பர் மாதம் 78 வயதை எட்டி உள்ளார். இதனால் அவர் மிகவும் வயதான அதிபர் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு டொனால்ட் டிரம்ப் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரியில் டிரம்ப் பதவி ஏற்ற போது அவருக்கு 70 வயதாகி இருந்தது. இதற்கு முன்பு ரொனால்ட...

