கர்நாடக மாணவர் நவீன் உயிரிழப்புக்கு நீட் தேர்வும் ஒரு காரணம்- குமாரசாமி குற்றச்சாட்டு!
போர் நடைபெறும் உக்ரைன் நாட்டில் இருந்து வெளியேற முடியாமல் இந்திய மாணவர்கள் பரிதவிக்கும் நிலை மற்றும் அங்கு கர்நாடக மாணவர் நவீன் கொல்லப்பட்டது தொடர்பாக
கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான குமாரசாமி கூறியதாவது:-
போர் நடைபெறும் உக்ரைனில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் நவீன் மரணம் அடைந்திருப்பது, நீட் தேர்வின் பிரதிபலிப்பாகும்
நவீன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 96 சதவீதமும், 12ம் வகுப்பு தேர்வில் 97 சதவீதமும் மதிப்பெண் பெற்றுள்ளார். அப்போதும், இந்தியாவில் அவருக்கு மருத்துவ சீட் மறுக்கப்பட்டது. ஒரு கிராமப்புற மாணவர் இவ்வளவு அதிக சதவீத மதிப்பெண் பெறுவது எளிதானது அல்ல.
இருந்தும் மருத்துவ சீட் மறுக்கப்பட்டது. இதனால் நவீன் தனது மருத்துவக் கனவை நனவாக்குவதற்காக உ...
கர்நாடக மாநிலத்தில் கார் வாங்கும் ஆர்வத்துடன் ஷோ ரூமுக்கு சென்ற விவசாயி ஒருவரை அங்கு பணியிலிருந்து விற்பனை பிரதிநிதிகள் அவரை பார்த்து உருவக் கேலி செய்துள்ளனர்.
இந்த செய்தி தேசிய அளவில் பரவியது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கார் நிறுவனமான மஹேந்திரா நிறுவனம் இதற்கு அவரிடம் கடிதம் மூலம் வருத்தத்தை தெரிவித்துள்ளது.
அதோடு அவருக்கு பொலேரோ காரையும் டெலிவரி செய்துள்ளது.
தும்கூர் மாவட்டத்தில் உள்ள ராமன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கெம்ப கவுடா. விவசாயியான இவர் கார் வாங்கும் நோக்கத்தில் அங்குள்ள மஹேந்திரா கார் விற்பனை ஷோ ரூமுக்கு சென்றுள்ளார். அவர் தனக்கு பிடித்தமான காரின் விலையையும் கேட்டுள்ளார்.
ஆனால் அந்த ஷோ ரூமிலிருந்து பிரதிநிதிகள், ‘இந்த கார் விலை 10 லட்சம் ரூபாய்; உன் பாக்கெட்டில் 10 ரூபாய் இருக்குமா?’ என ஏளனமாக பேசி அவரை கேலி செய்துள்ளனர்.
&nb...
கல்லூரிகள், தியேட்டர்களை திறக்க கர்நாடகாவில் அனுமதி!
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். அப்போது, தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்பின்னர் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ்களை திறக்கலாம். 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே ரசிகர்களை அனுமதிக்க வேண்டும். இதேபோல் ஆடிட்டோரியங்கள் போன்ற பொது நிகழ்வு நடைபெறும் இடங்களிலும் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
ஜூலை 19 முதல் இரவு நேர ஊரடங்கில் ஒருமணி நேரத்தைக் குறைத்துள்ளது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு
அமலில் இருக்கும்.
இதேபோல் ஜூலை 26ம் தேதி முதல் கல்லூரிகள், பல்கலைக்க...