ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 15
Shadow

உருவக்கேலிக்கு ஆளான கர்நாடக விவசாயியிடம் மன்னிப்பு கோரி, காரை டெலிவரி செய்த மஹேந்திரா!

 

கர்நாடக மாநிலத்தில் கார் வாங்கும் ஆர்வத்துடன் ஷோ ரூமுக்கு சென்ற விவசாயி ஒருவரை அங்கு பணியிலிருந்து விற்பனை பிரதிநிதிகள் அவரை பார்த்து உருவக் கேலி செய்துள்ளனர்.

இந்த செய்தி தேசிய அளவில் பரவியது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கார் நிறுவனமான மஹேந்திரா நிறுவனம் இதற்கு அவரிடம் கடிதம் மூலம் வருத்தத்தை தெரிவித்துள்ளது.

அதோடு அவருக்கு பொலேரோ காரையும் டெலிவரி செய்துள்ளது.

 

தும்கூர் மாவட்டத்தில் உள்ள ராமன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கெம்ப கவுடா. விவசாயியான இவர் கார் வாங்கும் நோக்கத்தில் அங்குள்ள மஹேந்திரா கார் விற்பனை ஷோ ரூமுக்கு சென்றுள்ளார். அவர் தனக்கு பிடித்தமான காரின் விலையையும் கேட்டுள்ளார்.

ஆனால் அந்த ஷோ ரூமிலிருந்து பிரதிநிதிகள், ‘இந்த கார் விலை 10 லட்சம் ரூபாய்; உன் பாக்கெட்டில் 10 ரூபாய் இருக்குமா?’ என ஏளனமாக பேசி அவரை கேலி செய்துள்ளனர்.

 

உடனடியாக அவர் அந்த காருக்கான தொகையை வெறும் 30 நிமிடத்தில் திரட்டிக் கொண்டு சென்று காரை டெலிவரி செய்யுங்கள் என சொல்லியுள்ளார். ஆனால் அவருக்கு உடனடியாக டெலிவரி செய்யப்படவில்லை. பணம் செலுத்தினால் டெலிவரி செய்ய சில தினங்கள் ஆகும் என தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த அந்த விவசாயி அவர்களிடம் வாக்குவாதம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

 

இந்த வீடியோ தேசிய அளவில் வைரலானது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் மஹேந்திரா நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் கெம்ப கவுடாவிடம் கடிதம் மூலம் மன்னிப்பு கோரியுள்ளது மஹேந்திரா நிறுவனம். அதோடு அவருக்கு காரையும் டெலிவரி செய்துள்ளது.

கெம்ப கவுடாவை மஹேந்திரா குடும்பத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளது அந்நிறுவனம். அந்நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹேந்திராவும் கெம்ப கவுடாவை வரவேற்று ட்வீட் செய்துள்ளார்

 

443 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன