சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: kerala

நடிகை அமலா பாலுக்கு கேரளாவில் குருவாயூர் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு!

நடிகை அமலா பாலுக்கு கேரளாவில் குருவாயூர் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் இந்துக்களை தவிர மாற்று மதத்தினர் வழிபாடு செய்ய அனுமதி இல்லை. இதுபோல கேரளாவின் கொச்சி பகுதியில் உள்ள திருவைராணிகுளம் மகாதேவர் கோவிலிலும் மாற்று மதத்தவர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இக்கோவிலின் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து கேரளா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு சென்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான அமலா பாலும் நேற்று முன்தினம் உறவினர்களுடன் இக்கோவிலுக்கு சென்றார். அங்கு அவரை கோவிலுக்குள் அனுமதிக்க கோவில் நிர்வாகிகள் மறுத்து விட்டனர். அமலா பால் மாற்று மதத்தவர் என்பதால் அவரை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து விட்டது. இதனால் மனம் வருந்திய நடிகை அமலா பால், கோவிலுக்கு வெளியே நின்றபடி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கோவில் வரு...
கேரளாவில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு!

கேரளாவில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்ததால் அங்கு பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 26 ஆயிரத்து 729 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. கேரளாவில் கொரோனா தொற்று குறைந்ததால் அங்கு பள்ளி, கல்லூரிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி இன்று முதல் மாநிலம் முழுவதும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு தெர்மல் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை நடத்தி வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். வகுப்புகளுக்கு வர விரும்பாத மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பாடங்களை படிக்கலாம் எனவும் அரசு அறிவித்து உள்ளது. ஒன்று முதல் 9-ம் வகுப்பு வ...
கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களுக்கு இன்று பொங்கல் விடுமுறை

கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களுக்கு இன்று பொங்கல் விடுமுறை

HOME SLIDER, NEWS, செய்திகள்
  கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களுக்கு இன்று பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் கொல்லம், இடுக்கி, வயநாடு, பத்தனம்திட்டா, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். அந்தப் பகுதிகளில் கேரள அரசு வழக்கமாக ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் விடுமுறை விடுவது வழக்கம். இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் விடுமுறை என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை சுட்டிக்காட்டி கேரள அரசுக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்றைய தினம் பொங்கல் விடுமுறை விடுமாறு கேட்டிருந்தார். இதனையடுத்து கேரள அரசு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்றைய தினம் பொங்கல் விடுமுறை என அறிவித்துள்ளது....
தொடரும் கனமழை – கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

தொடரும் கனமழை – கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

flood news, HOME SLIDER, செய்திகள்
  தொடரும் கனமழை - கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்! வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மலையோர கிராமங்களில் பலத்த மழை பெய்து வருவதால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. முக்கிய அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளில் இருந்து மதகுகள் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், மலைகள் அல்லது ஆறுகளுக்கு அருகில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும...