வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: Kgf2

கே.ஜி.எஃப் பட நடிகர் காலமானார்!

கே.ஜி.எஃப் பட நடிகர் காலமானார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
பிரபல கன்னட நடிகர் மோகன் ஜுனேஜா. குணசித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து வந்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி மெகா ஹிட்டான கே.ஜி.எஃப் சாப்டர் 2 படங்களிலும் இவர் நடித்திருந்தார். சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள மோகன் ஜுனேஜா, சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட மோகன் ஜுனேஜா, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது. மோகன் ஜுனேஜாவின் மறைவு கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்....
கே.ஜி.எஃப்-2 வெற்றி – கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

கே.ஜி.எஃப்-2 வெற்றி – கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரசாந்த் நீலின் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 14-ம் தேதி வெளியான படம் கேஜிஎப் 2'. இதில், சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இப்படம் முதல் நாளிலேயே உலகம் முழுவதும் சுமார் ரூ.133 கோடி மேல் வசூல் செய்து சாதனை செய்திருந்தது. 'கேஜிஎப் 2' படம் இந்திய அளவிலும், உலக அளவிலும் பாக்ஸ் ஆபிசில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. படம் வெளியான நான்கு நாட்களில் உலக அளவில் 500 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி சாதனை படைத்தது. இதன் மூலம், உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூலில், 'பென்டாஸ்டிக் பீஸ்ட்: தி சீக்ரெட் ஆப் டம்பிள்டோர்' படத்திற்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வரை சுமார் ரூ.600 கோடிக்...
அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய யஷ்!

அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய யஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் படத்தில் நடித்து பிரபலமானவர் கன்னட நடிகர் யஷ். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் தற்போது கேஜிஎஃப்- 2 வெளியாகியுள்ளது. இந்த படமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக தனது புதிய படத்துக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் யஷ். அந்தவகையில் அடுத்து நடிக்கும் படத்துக்காக தனது நீண்ட தாடி, தலைமுடியை ட்ரீம் செய்து ஸ்மார்ட்டாக மாறி இருக்கிறார். 6 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய அளவில் வளர்த்து வைத்திருந்த தன் தலை முடி, தாடியை குறைத்து புதிய கெட்டப்புக்கு மாறி உள்ளார். யஷின் இந்த தோற்றம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது....
கே.ஜி.எஃப் 2  முதல் நாள் வசூல்!

கே.ஜி.எஃப் 2 முதல் நாள் வசூல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு யஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கே.ஜி.எஃப் 2’ . முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் உருவாக்கி இருந்தார். இப்படத்தில் யஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தார்கள். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகமுழுவதும் வெளியானது. ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வரும் இப்படத்தின் முதல் நாள் வசூலை படக்குழுவினரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள். அதன்படி, முதல் நாள் இந்தியா முழுவதும் ரூ.134.5 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்....
கே.ஜி.எப்-2 டிரைலர் செய்த புதிய சாதனை!

கே.ஜி.எப்-2 டிரைலர் செய்த புதிய சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'யாஷ்' ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த  படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இந்த டிரைலர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது டிரைலர் வெளியான 24 மணி நேரத்திற்குள் நாட்டின் அனைத்து மொழிகளையும் சேர்த்து 109 மில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது. ...
ட்ரெண்டிங்கில் இருக்கும் ‘கே ஜி எஃப் 2’ பட  “தூஃபான்” பாடல்!

ட்ரெண்டிங்கில் இருக்கும் ‘கே ஜி எஃப் 2’ பட “தூஃபான்” பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      *இணையத்தில் வைரலாகும் 'தூஃபான்': ட்ரெண்டிங்கில் இருக்கும் 'கே ஜி எஃப் 2' பட பாடல்* முன்னணி நடிகர் யஷ் நடிக்கும் 'கே ஜி எஃப் ' படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற 'தூஃபான்..' பாடல் வெளியாகி இணையத்தில் சாதனை படைத்து வருகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் 2'. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, இந்திய அளவில் வசூலை வாரி குவித்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’ திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. https://youtu.be/8JumUZyzXP8 பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்க...
‘கே.ஜி.எப். 2’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கே.ஜி.எப். 2’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘கே.ஜி.எப். 2’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு! கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதலில் இப்படத்தை இந்தாண்டு ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், கே.ஜி.எப். இரண்டாம் பாகத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி அடுத்தாண்டு ஏப்ரல் 14-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது....
யஷ் நடிப்பில் உருவாகும் கே.ஜி.எப் 2 படத்தில் இந்திரா காந்தியாக நடிக்கும் பிரபலம்..!

யஷ் நடிப்பில் உருவாகும் கே.ஜி.எப் 2 படத்தில் இந்திரா காந்தியாக நடிக்கும் பிரபலம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கன்னடத்தில் உருவாகி தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் கடந்த ஆண்டு வெளியான படம் கேஜிஎப். யஷ் கதாநாயகனாக நடித்து இருந்த இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. தமிழில் விஷால் நிறுவனம் வெளியிட்டது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. படம் 1970 -1980களில் நடக்கும் கதை என்பதால் படத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரமும் வருகிறது. இதில் நடிப்பதற்கு பொருத்தமான நடிகையை தேடி வந்தனர். தற்போது இந்த வேடத்தில் பிரபல இந்தி நடிகை ரவீணா டாண்டன் நடித்து வருகிறார்...