ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 20
Shadow

‘கே.ஜி.எப். 2’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கே.ஜி.எப். 2’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
முதலில் இப்படத்தை இந்தாண்டு ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், கே.ஜி.எப். இரண்டாம் பாகத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி அடுத்தாண்டு ஏப்ரல் 14-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன