இன்றைய முக்கியச் செய்திகள் 20.01.2022
தமிழகத்தில் இன்று பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, நடைபயணம், பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்த தடை விதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு, 27 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 26 ஆயிரத்து 981 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
பருத்தி மற்றும் நூல் விலைஉயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வரும் 24-ம் த...

