ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: Mirchi Shiva

நாங்க ஆட்சிக்கு வந்தா.. வைரலாகும் இடியட் ஸ்னீக் பீக் வீடியோ!

நாங்க ஆட்சிக்கு வந்தா.. வைரலாகும் இடியட் ஸ்னீக் பீக் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடேட் தயாரிப்பில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ஹாரர் காமெடி திரைப்படம் “இடியட்”. ‘தில்லுக்கு துட்டு’ இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் கலக்கல் கமர்ஷியல் மசாலா திரைப்படமாக, இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ராம்பாலா. இதில் ஊர்வசி, அக்ஷரா கௌடா, மயில்சாமி, ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இடியட் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அரசியலை பங்கமாக கலாய்ப்பது போன்று இடம் பெற்றிருக்கும் இந்த ஸ்னீக் பீக் வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.  ...
மீண்டும் இணைந்த ‘கலகலப்பு 2’ கூட்டணி!

மீண்டும் இணைந்த ‘கலகலப்பு 2’ கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மீண்டும் இணைந்த ‘கலகலப்பு 2’ கூட்டணி! சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘கலகலப்பு 2’. ஜீவா, மிர்ச்சி சிவா ஆகியோர் நடித்திருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர்கள் ஜீவாவும், மிர்ச்சி சிவாவும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர். அதன்படி அவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ள படத்துக்கு ‘கோல்மால்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தை பிரபல கன்னட இயக்குனர் பொன் குமார் இயக்க உள்ளார். அவர் இயக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும். இப்படத்தில் பாயல் ராஜ்புட் மற்றும் தாராள பிரபு பட நடிகை தான்யா ஹோப் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இப்படத்தை ஜாகுவார் ஸ்டூடியோஸ் சார்பில் வினோத் ஜெயின் மற்றும் நரேஷ் ஜெயின் தயாரிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக மொரீசியஸில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்....
மீண்டும் இணையும் கலகலப்பு கூட்டணி!

மீண்டும் இணையும் கலகலப்பு கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மீண்டும் இணையும் கலகலப்பு கூட்டணி! ஜெயம் கொண்டான் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.கண்ணன். இதையடுத்து சேட்டை, கண்டேன் காதலை, இவன் தந்திரன், பூமரேங் போன்ற படங்களை இயக்கிய இவர், அடுத்ததாக அதர்வாவின் தள்ளிப்போகாதே, நகுலின் எரியும் கண்ணாடி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில், அவர் இயக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்தில் மிர்ச்சி சிவா மற்றும் யோகிபாபு இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. யோகிபாபுவும், சிவாவும் ஏற்கனவே கலகலப்பு, கலகலப்பு 2, சுமோ ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது....