கலாச்சார அவமதிப்பு, ஆபாச சர்ச்சையில் சிக்கிய கிரீஸ் குறும்படம்
கலாச்சார அவமதிப்பு, ஆபாச சர்ச்சையில் சிக்கிய கிரீஸ் குறும்படம்
கிரீஸ் நாட்டின் ஏதென்சில் உள்ள பண்டைய தொல்பொருள் தளமான அக்ரோபோலிசை அவமதிக்கும் வகையில், குறும்படம் எடுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அக்ரோபோலிசில் இரண்டு ஆண்கள் உடலுறவு கொள்வது போன்று அந்த படத்தில் வருகிறது. மொத்தம் 36 நிமிடங்கள் ஓடும் அந்த குறும்படத்திற்கு ‘டிபார்த்தினான்‘ என பெயரிட்டுள்ளனர். டிசம்பர் 21ம் தேதி ஆன்லைனில் படத்தை வெளியிட்டுள்ளனர்.
ஆனால் இந்த வாரம்தான் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது.
இதையடுத்து நாட்டின் கலாச்சார அமைச்சகம் விசாரணையை தொடங்கி உள்ளது. அக்ரோபோலிசில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை, அக்ரோபோலிசின் தொல்பொருள் தளமானது,
சமூக செயல்பாடு மற்றும் நினைவுச்சின்னத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் எந்தவித செயல்பாடுகளுக்கும் ஏற்ற இடம் அல்ல எனறு கலாச்சாரத்துறை கூறி உள்ளது.
...
