புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: NAAI SEKAR

வசூல் செல்ப் எடுக்காத பொங்கல் ரிலீஸ் படங்கள்… OTT ரிலீசுக்கு பிறகு மீண்டும் தியேட்டருக்கு வந்த “புஷ்பா”

வசூல் செல்ப் எடுக்காத பொங்கல் ரிலீஸ் படங்கள்… OTT ரிலீசுக்கு பிறகு மீண்டும் தியேட்டருக்கு வந்த “புஷ்பா”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, கட்டுரை, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருந்த ‘வலிமை’, ‘ஆர்ஆர்ஆர்’, ‘ராதே ஷ்யாம்’ உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் தள்ளிவைக்கப்பட்டது. பொங்கல் ரிலீஸ் வரை நல்ல வசூலில் இருத புஷ்பா படம் தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்டு,  பொங்கல் புதுவரவாக ‘நாய் சேகர்’, ‘என்ன சொல்ல போகிறாய், ‘தேள்’ உள்ளிட்ட மீடியம் பட்ஜெட் படங்கள் திரையரங்கில் வெளியாகின.  பல படங்கள் ரிலீஸ் ஆனாலும்  இதில் எந்தப் படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. வசூலிலும் செல்ப் எடுக்கவே இல்லை. ஏற்கனவே கொரானா கட்டுப்பாடுகள் காரணமாக 50 சதவீத இருக்கை சிக்கல். இதன் காரணமாக தியேட்டர்காரர்களின் பார்வை மீண்டு புஷ்பா பக்கம் திரும்பியது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் உலகமெங்கும் வெளியானது. ஃ...
வடிவேலுவுக்காக லண்டனில் கம்போசிங் செய்த சந்தோஷ் நாராயணன்

வடிவேலுவுக்காக லண்டனில் கம்போசிங் செய்த சந்தோஷ் நாராயணன்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
*வடிவேலுவுக்காக லண்டனில் கம்போசிங் செய்த சந்தோஷ் நாராயணன்* வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் தயாராகி வரும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்திற்காக, அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் லண்டனில் பாடல்களை உருவாக்கி வருகிறார். இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இதில் 'வைகைப்புயல்' வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை சிவாங்கி, 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப்படத்தின் தொடக்க விழா அண்மையில் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து படத்திற்கு இசையமைக்கும் பணிகள்...
வீடு திரும்பினார் நடிகர் வடிவேலு

வீடு திரும்பினார் நடிகர் வடிவேலு

CINI NEWS, HOME SLIDER, செய்திகள், நடிகர்கள்
கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் வடிவேலு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். நீண்ட இடைவேளிக்கு பிறகு சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் வடிவேலு. இப்படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்று இந்தியா திரும்பிய அவருக்கு கடந்த 24-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்படும் போது அவருக்கு தீவிர அறிகுறிகள் ஏதும் இல்லை. இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு முழுமையாக குணமடைந்த அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்....
வடிவேலு ரீ-என்ட்ரி!

வடிவேலு ரீ-என்ட்ரி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘நாய் சேகர்’ மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகும் வடிவேலு நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஓப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை. தற்போது அவர் ரீ-என்ட்ரிக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தலைநகரம், படிக்காதவன், மருதமலை போன்ற படங்களை இயக்கிய சுராஜ் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு நாய் சேகர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சுராஜ் இயக்கிய தலைநகரம் படத்தில் வடிவேலுவின் ‘நாய் சேகர்’ கதாபாத்திரம் மிகவும் பிரபலமானதால் இப்படத்திற்கு அதையே தலைப்பாக வைக்க உள்ளார்களாம். சுராஜ் - வடிவேலு இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அ...