ukraine war – சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 300 டாலரை எட்டுமாம்!
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் முடிவுக்கு வராத நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 300 டாலரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 135 டாலராக அதிகரித்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான தடை விதிக்கப்பட்டிருப்பதால், பேரல் ஒன்றின் விலை 300 டாலர் வரை விலை உயரும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இதனிடையே, கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 5,0 56 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 40,448 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இருப்பினும் வெள்ளி வில...
