புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: Putin

போரை நிறுத்த அதிபர் புதின் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்-உக்ரைன் அதிபர் நிபந்தனை!

போரை நிறுத்த அதிபர் புதின் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்-உக்ரைன் அதிபர் நிபந்தனை!

HOME SLIDER, NEWS, உக்ரைன் போர், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 9-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்புப் படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன. போரை முடிவுக்கு கொண்டு வர நடத்தப்பட்ட இரு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியிலே முடிந்துள்ளது. சண்டை நடைபெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற இருநாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதால் சண்டையின் தீவிர தன்மை சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என உக்ரைன் அதி...
உக்ரைன் விவகாரம்: பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா-ரஷியா அதிபர்கள் சம்மதம்!

உக்ரைன் விவகாரம்: பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா-ரஷியா அதிபர்கள் சம்மதம்!

HOME SLIDER, NEWS, அரசியல், உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள்
உக்ரைன் - ரஷியா இடையேயான பதற்றம் குறித்து பிரான்ஸ் அதிபர்  இம்மானுவேல் மேக்ரோன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன்  தொலைபேசி மூலம் தனித்தனியாக விவாதித்தார். ரஷியா படையெடுப்பை தடுக்கும் நடவடிக்கை குறித்து இரு தலைவர்களுடன் அவர் பேசினார் உக்ரைன் சூழலால் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து அமெரிக்கா, ரஷியா அதிபர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் அப்போது கேட்டுக் கொண்டார்.  இதை ஜே பைடனும், விளாடிமிர் புதினும் ஏற்றுக் கொண்டதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்புத்துறை செயலாளர் ஜென்சாகி தெரிவித்துள்ளார். இதையடுத்து அமெரிக்கா, ரஷியா அதிபர்கள் சந்திக்கும் உச்சி மாநாடு குறித்தும், அதில் விவாதிக்கப்படும் பொருள் குறித்த அறிக்கைகைளை தயாரிப்பது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் ரஷ்ய வெளியுறவு மந்...