புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: RJ பாலாஜி ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்

டார்க் காமெடி த்ரில்லர் படத்தில் RJ பாலாஜி ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்!

டார்க் காமெடி த்ரில்லர் படத்தில் RJ பாலாஜி ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மலையாளத்தில் வெளியாகி வெற்றியடைந்த ‘தியான்’ படத்தின் இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கும் தமிழ் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி – ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். ஆர்.ஜேவாக இருந்து நகைச்சுவை நடிகராக உயர்ந்த ஆர்.ஜே. பாலாஜி தற்போது, தனக்கேற்ற கதைகளை தேர்வு செய்து நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்த ‘எல்.கே.ஜி’, ‘மூக்குத்தி அம்மன்’ ஆகிய படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றன. இதையடுத்து ’வீட்ல விசேஷங்க’ என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். அந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மலையாள இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் தமிழில் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக நடிக்கிறார். அதேபோல் ஆர்.ஜே பாலாஜி ஜோடிக்கான நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது....