செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

Tag: sabarimala makara jyothi

தனி ஹெலிகாபடரில் பறந்து வந்து ஐய்யப்பனை தரிசித்த பாலிவுட் ஹீரோ!

தனி ஹெலிகாபடரில் பறந்து வந்து ஐய்யப்பனை தரிசித்த பாலிவுட் ஹீரோ!

HOME SLIDER, செய்திகள், நடிகர்கள்
தனி ஹெலிகாபடரில் பறந்து வந்து ஐய்யப்பனை தரிசித்த பாலிவுட் ஹீரோ! பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் சபரிமலை வந்தார். தனி ஹெலிகாப்டர் மூலம் கொச்சி வந்த அவர், 11.30 மணிக்கு சபரிமலை ஐயப்பனை தரிசிக்க மலைப்பயணம் மேற்கொண்டார். பின்னர் தந்திரி மற்றும் மேல்சாந்தியை சந்தித்து ஆசி பெற்றார். மாளிகைபுரம் நடையில் தரிசனம் மற்றும் பிரசாதங்களை முடித்துக் கொண்டு திரும்பினார். அஜய் தேவ்கன் தற்போது 4வது முறையான சபரிமலை யாத்திரை மேற்கொண்டுள்ளார். ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கத்யாவதி ஆகிய படங்கள் அஜய் நடிப்பில் வெளியாக உள்ளன. பொங்கல் கொண்டாட்டமாக ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய படங்கள் கொரோனா பரவல் காரணமாக தள்ளிப் போனது. அமிதாப் பச்சனை வைத்து ரன்வே 34 படத்தையும் அஜய் தேவ்கன் இயக்கி வருகிறார். இவர் இயக்கும் மூன்றாவது படம் இதுவாகும்....
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மாலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம்!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மாலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மாலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம்! சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மகரவிளக்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன.இன்று பிரசித்திபெற்ற மகரவிளக்கு பூஜை, மகரஜோதிதரிசனமும் நடக்கிறது. இந்த பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று மதியம் ஊர்வலமாக புறப்பட்டது. திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட அய்யப்ப பக்தர்கள் தலைச்சுமையாக எடுத்துச் சென்றனர் பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஆபரண பெட்டிகள் இன்று மாலை 6.20 மணிக்கு சபரிமலை சன்னிதானம் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு திருவாபரண பெட்டிகளுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். தொடர்ந்து பதினெட்டாம் படி வழியாக கொண்டு செல்லப்படும் திருவாபரணங்களை தந்திரியும், மேல்சாந்த...