வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

Tag: Schools Reopen

1 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறப்பு!

1 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கோடை விடுமுறைக்கு பின், மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கும் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.), 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 2022-23-ம் கல்வியாண்டுக்கான நேரடி வகுப்புகள் அவர்களுக்கு ஆரம்பாகிறது. கடந்த 2 கல்வியாண்டுகளுக்கு பிறகு, வழக்கமாக தொடங்கப்படும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடக்க உள்ளன. காலை 9.10 மணி முதல் மாலை 4.10 மணி வரையில் 8 பாடவேளைகளாக ஒரு நாளைக்கு 7 மணி நேரம் வகுப்புகள் நடத்த திட்டமிட்டு, அதற்கான அட்டவணையை கல்வித்துறை நேற்று முன்தினம் வெளியிட்டது. ஆனால் இது திட்டமிடலுக்கான நேரம்தான் என்றும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவுடன் கலந்தாலோசித்து பள்ளிகளின் அமைவிடம், வகுப்புகள் தொடங்கும், முடிக்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ...
நாளை முதல் பள்ளிகள் திறப்பு!

நாளை முதல் பள்ளிகள் திறப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளன. பள்ளிக் கூடங்களில் ஒரு வாரத்துக்கு பாடங்களை நடத்தாமல் புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கோடை விடுமுறை முடிந்து நாளை (திங்கட்கிழமை) முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய கல்வியாண்டு வகுப்புகள், நாளை தொடங்க உள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற 20-ந்தேதி பிளஸ்-2 வகுப்புகளும் 27-ந்தேதி பிளஸ்-1 வகுப்புகளும் தொடங்குகின்றன. இதற்காக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களுக்கும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து பாட நோட்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கூடங்கள் நாளை (திங்கட்கிழமை) தொடங்கியதும் இலவச பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகளை வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. வகுப்புகள் த...
தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 13-ந் தேதி பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 13-ந் தேதி பள்ளிகள் திறப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவர்களுக்கு இணைய வழி சேவைகள் மற்றும் 2022-23-ம் கல்வி ஆண்டு நாட்காட்டி, ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாட்காட்டி வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் அதற்கான தமிழ்வழி சான்றிதழை பள்ளிக்கு சென்று வாங்கி வந்தனர். இனி சான்றிதழ்கள் ஆன்லைன் வழியாக வழங்கப்படும். அதேபோல் இணை படிப்புகளுக்கான சான்றிதழ், மைக்ரேஷன் சான்றிதழ் உள்ளிட்ட 25 வகையான சான்றிதழ்கள் இனி ஆன்லைன் வழியாக இ-சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். இது எளிதான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் பள்ளிகளில் ஆசிரியர்கள் 100-க்கும் மேலான பதிவேடு பராமரித்...
கேரளாவில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு!

கேரளாவில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்ததால் அங்கு பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 26 ஆயிரத்து 729 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. கேரளாவில் கொரோனா தொற்று குறைந்ததால் அங்கு பள்ளி, கல்லூரிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி இன்று முதல் மாநிலம் முழுவதும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டன. பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு தெர்மல் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை நடத்தி வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். வகுப்புகளுக்கு வர விரும்பாத மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பாடங்களை படிக்கலாம் எனவும் அரசு அறிவித்து உள்ளது. ஒன்று முதல் 9-ம் வகுப்...
பள்ளிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடக்கம்!

பள்ளிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கியதால் கடந்த ஆண்டில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதலில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு கொரோனா கட்டுக்குள் வந்ததால் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 50 சதவீத மாணவர்கள் என்ற சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு ஜனவரி 3-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவ தொடங்கியதால் பள்ளிகளுக்கு ஜனவரி 31-ந்தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட்டது. வகுப்புகள் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டன. இந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக...
19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் வருகை தந்த மாணவ- மாணவிகள்!

19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் வருகை தந்த மாணவ- மாணவிகள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் வருகை தந்த மாணவ- மாணவிகள்! கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், கடந்த 19 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் ஏற்கனவே 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தொடரந்து, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகளுக்கு  நவம்பர் 1-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். அதன்படி கொரோனா நெறிமுறைகளுடன் இன்று முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு வரும் மாணவ -மாணவிகள...
பள்ளிகள் திறப்பில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை- பள்ளி கல்வித்துறை அமைச்சர்!

பள்ளிகள் திறப்பில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை- பள்ளி கல்வித்துறை அமைச்சர்!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
பள்ளிகள் திறப்பில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை- பள்ளி கல்வித்துறை அமைச்சர்! திருச்சி மாவட்ட நேரு யுவகேந்திரா, என்.என்.எஸ். திட்டம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இந்திய 75-வது ஆண்டு சுதந்திர தின ஓட்டம், இன்று(சனிக்கிழமை) நடந்தது. திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகில் பழைய தபால் நிலையத்திற்கு முன்பு அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினைவுதூண் பகுதியில் விழா நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஓட்டப் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுத்தமாதம் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே அனைத்து மாவட்டகல்வி அதிகாரிகளிடமும் கருத்து கேட்கப்பட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினி...