நடிகைக்கு பாலியல் தொல்லை நடிகர் திலீப் வீட்டில் போலீஸ் சோதனை!
நடிகைக்கு பாலியல் தொல்லை நடிகர் திலீப் வீட்டில் போலீஸ் சோதனை!
கேரளாவில் கடந்த 2017ம் ஆண்டு பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அந்த வழக்கில் நடிகர் திலீப் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் திலீப் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
திலீப்பின் நெருங்கிய நண்பராக இருந்த சினிமா இயக்குநர் பாலசந்திரகுமார் அளித்த பேட்டியை தொடர்ந்து தற்போது இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
பாலச்சந்திர குமார் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், திலீப்புக்கு எதிராக திடுக்கிடும் தகவல்களை கூறியிருக்கிறார்.
நடிகையை மானபங்கம் செய்தபோது எடுத்த வீடியோவை நடிகர் திலீப் தனது வீட்டில் இருந்து பார்த்ததாக அவர் கூறி உள்ளார்
இந்நிலையில் நடிகர் திலீப், அவரது சகோதரர் அனூப் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்தில் கேரள...


