வியாழக்கிழமை, மே 16
Shadow

ஓப்பன் மைண்ட்டுடன் வாழுங்கள்… செக்ஸ் என்பது அழகான விஷயம் -எஸ்.ஏ.சி.பரபரப்பு

 

ஓப்பன் மைண்ட்டுடன் வாழுங்கள்… செக்ஸ் என்பது அழகான விஷயம் -எஸ்.ஏ.சி.பரபரப்பு

ஜெய்- அதுல்யா-வைபவி நடிக்கும் படத்தை எஸ்.ஏ.சி இயக்கியிருக்கிறார்.
இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியபோது: இந்த படம் எனக்கு 70வது படம். நான் எல்லாவற்றையும் பார்த்து அனுபவித்து விட்டேன்.
இந்த படத்தை முடித்த பிறகு இந்த படம் வெற்றி பெற்றாலும் இல்லாமல் போனாலும் இனி படம் இயக்க மாட்டேன்.
ஜெய் பத்தி சொல்லும் போது ஒரு விளையாட்டு பையனா இருக்கானே என்று எல்லாரும் சொன்னார்களேன்னு பார்த்து பேசினேன். ஆனால் ஜெய் ரொம்ப ஆர்வமா நடிச்சார். ரொம்ப பெருசா வருவார். அவரால எப்ப ஷூட்டிங் வர முடியும்னு கேட்டுகிட்டு அதுக்கு ஏற்றார் போல ஷூட்டிங் நடத்தினேன்.

நம்ப சமூகத்தில் ஒரு விஷயத்தை பேச ரொம்ப தயங்குவார்கள். ஆனா அந்த விஷயம் ரொம்ப அருமையானது. செக்ஸ் என்பது வாழ்க்கையில் ரொமப அழகான விஷயம். எதையும் யோசிக்க கூடாது. ஜாலியா வாழ்க்கையை வாழ்ந்து பாத்துடனும். நான் அப்படிதான். தப்பு பன்னா அதை தைரியமா சொல்லிடனும். மனைவிகிட்ட இல்ல காதலிகிட்ட உண்மையா சொல்லிட்டா பிரச்சினைகளே வராது.

ஓப்பன் மைண்டா இருங்க ஏன்னா இந்த வாழ்க்கை ஒருமுறை தான் மனித குலத்துக்கு உண்டு. அதனால வாழக்கைய அழகா வாழுங்கள்.

எனக்கு 76 வயசு ஆகிறது. ஜெய்க்கு 36 வயசு ஆகிறது. ரொம்ப மார்டனா யூத் எதை எதிர்பார்க்கிறார்கள்களோ அதுதான் இந்த படத்தில் சொல்லி இருக்கேன்.
இந்த படம் கண்டிப்பா ஜெய்க்கு பெரிய ஹிட் குடுக்கும். படத்தில் நடித்த ஹீரோ ஜெய், கதாநாயகிகள் அதுல்யா, வைபவி இவங்களோட செல்போன் நெம்பர் என் போன்ல இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்

790 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன