திங்கட்கிழமை, செப்டம்பர் 14
Shadow

Tag: shakeela

உணவின்றி தவித்த ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகை ஷகிலா!

உணவின்றி தவித்த ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகை ஷகிலா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
உணவின்றி தவித்த ஏழை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகை ஷகிலா! மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட இவரது, இமேஜை குக் வித் கோமாளி நிகழ்ச்சி முற்றிலும் மாற்றியது. இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பின்னர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷகிலா, தற்போது சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். ஊரடங்கு காரணமாக சாலையோரம் உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி உள்ளார். இது குறித்த புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: “உங்களுக்கு இருக்கும் இரண்டு கைகளில், ஒன்றை உங்களுக்காகவும், மற்றொரு கையை பிறருக்கு உதவுவதற்காகவும் பயன்படுத்துங்கள். உங்களால் இயன்ற அளவுக்கு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யுங்கள்” என...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலா மகள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலா மகள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷகிலா மகள்! தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடிகர் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகென் ராவும், 4-வது சீசனில் நடிகர் ஆரியும் வெற்றி பெற்றுள்ளனர். தமிழில் முதல் மூன்று சீசன்களும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தொடங்கப்பட்ட நிலையில், 4-வது சீசன் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைந்தது. இந்நிலையில் பிக்பாஸ் ஐந்தாவது சீசனை ஜூன் மாதம் 3 வாரத்திலிருந்து ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிக்பாஸ் 5 நிகழ்ச்சிக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியிருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இதனிடையே இந்தமுறை கலந்து கொள்ள இருப்பதாக ஒரு சில திரைபிரபலங்களின் பெயரும் அடிபட தொடங்கியுள்ளது. ஏற்கனவே நடிகர்கள் ராதாரவி, மன்...
தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா!

தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகைகள்
“இப்போது தான் அரசியலில் நுழைந்துள்ளேன். இனி போக போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்”-நடிகை ஷகிலா பேட்டி! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகம் மட்டுமின்...
OTT டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ஷகிலாவின் வாழ்க்கை!

OTT டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ஷகிலாவின் வாழ்க்கை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  OTT டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ஷகிலாவின் வாழ்க்கை! கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25-ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நடிகை ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் உள்ளிட்ட படங்கள் OTT தளத்தில் வெளியிடப்பட்டன. அடுத்ததாக நடிகை வரலட்சுமியின் டேனி, யோகி பாபு நடித்த காக்டெய்ல் உள்ளிட்ட படங்களும் விரைவில் OTT டிஜிட்டல் தளத்தில் வெளியாக இருக்கின்றன. கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தையும் OTT தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கன்னட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் இயக்கத்தில் ‘ஷகீலா நாட் பார்ன் ஸ்டார்’ என்ற டைட்டில் உடன் உருவாகும் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சதா நடித்துள்ளார். அவருடன் தேசியவிருது பெற்...