
OTT டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ஷகிலாவின் வாழ்க்கை!
கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25-ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நடிகை ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் உள்ளிட்ட படங்கள் OTT தளத்தில் வெளியிடப்பட்டன. அடுத்ததாக நடிகை வரலட்சுமியின் டேனி, யோகி பாபு நடித்த காக்டெய்ல் உள்ளிட்ட படங்களும் விரைவில் OTT டிஜிட்டல் தளத்தில் வெளியாக இருக்கின்றன.

கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தையும் OTT தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்னட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் இயக்கத்தில் ‘ஷகீலா நாட் பார்ன் ஸ்டார்’ என்ற டைட்டில் உடன் உருவாகும் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சதா நடித்துள்ளார். அவருடன் தேசியவிருது பெற்ற பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதியும் நடித்துள்ளார். இவர் ரஜினிகாந்தின் காலா படத்தில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

